[X] Close

இந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 9 – மே 15 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


9-15

  • kamadenu
  • Posted: 09 May, 2019 12:11 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். தொழிலில் வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் நியாயம் ஓங்கும்.

பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி வந்து சேரும். பெண்கள், சக ஊழியர்கள் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். தந்தையின் செல்வாக்கால் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைத் துறையினர் கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். பெண்களுக்கு, தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு, பாராட்டு கிடைக்கும். மனக்கவலையும் உடல்சோர்வும் உண்டாகும். ஆன்மிக நாட்டமும்,  தைரியமும் சேர்ந்து ஊக்கத்தைக் கொடுக்கும். மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 6, 9

பரிகாரம்: திருச்செந்தூர் செந்திலதிபனை நினையுங்கள். அனைத்துக் காரியங்களும் தங்கு தடையின்றி நடைபெறும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் உற்சாகம் தரும் மாற்றங்கள் நேரும். தொழிலில் புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். பால் வியாபாரம், கால்நடைகளால் நன்மை உண்டாகும். நிலம் தொடர்பான வழக்குகள் சாதகமாக முடியும். உத்தியோகஸ்தர்கள் புதிய வழக்குகளைச் சந்திக்க நேரிடலாம்.

வேலை நிமித்தமாக வெளிநாட்டுப் பயணம் இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். மேலதிகாரிகளின் செயல்கள் நிம்மதியைப் பாதிப்பதாக இருக்கும். பெண்களுக்கு, உறவினர் பாசமழை பொழிவார்கள். வீடும் வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கலைத் துறையினருக்கு, எடுத்த காரியத்தைச் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே தங்க நேரலாம். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சலும், மனச்சோர்வும் உண்டாகும். மாணவர்களுக்கு, படிப்பில் கவனச் சிதறல் வேண்டாம். பெரியோர் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 1, 5, 6

பரிகாரம்: லக்ஷ்மி நரசிம்மருக்கு துளசி மாலை சார்த்தி வணங்குங்கள்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெறுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். தொழிலில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூரப் பிரயாணங்கள் சாத்தியப்படும்.  வழக்குகளில் வெற்றி கிட்டும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு, பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். மனம்விரும்பிய வீட்டுக்குக் குடிபெயர்வார்கள். மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்பும் சமாதானமும் நிலவும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல்கள் வந்துசேரும்.

 பெண்களுக்கு, எதிர்விளைவுகளை முன்கூட்டியே யோசித்து வார்த்தைகளை எச்சரிக்கையாக வெளியிடுங்கள்.  கலைத் துறையினருக்கு தொழிலில் சில வாக்குவாதங்கள் வந்துபோகும். அரசியல்வாதிகளுக்கு, விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். மாணவர்கள் படிப்பில் சாதனைகள் புரிவார்கள். கல்விச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன்

திசைகள்: கிழக்கு, மேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை

எண்கள்: 1, 5, 7, 9

பரிகாரம்: மஹாவிஷ்ணுவைப் பூஜித்து வர நன்மையுண்டு. கோயில் திருப்பணிகளில் பங்கு பெறுங்கள்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் நெடுங்காலமாகத் தடைபட்டிருந்த சுபகாரியங்கள் நடைபெறும். தொழிலில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். பணப்பரிமாற்றங்கள் தங்குதடையின்றி நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் தூரதேசப் பயணம் எதிர்நோக்கியிருந்தவர்ளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

வேலைக்குக் காத்திருந்தவர்களுக்கு நல்லசேதி வரும். வீடுகட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். உறவுகள், நண்பர்கள் மத்தியில் கருத்து வேற்றுமை அகலும். மனஸ்தாபங்கள் நீங்கும்.

கணவன் மனைவிக்குள் பேசிச் செய்யும் காரியங்கள் பலன்தரும். தந்தைவழி உறவினர்கள் தேடிவருவார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு, பிள்ளைகள் உங்களுக்குச் சந்தோஷத்தை கொடுப்பார்கள். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் சேரும்.

அரசியல்வாதிகளுக்கு, உங்களிடம் போட்டி, பொறாமை கொண்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். மாணவர்களுக்கு, கல்வி விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

திசைகள்: கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 1, 6, 9

பரிகாரம்: வேல்முருகனை வழிபட குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்களின் எண்ணங்கள், செயல்களுக்கேற்ப உயர்ந்த இடம் கிடைக்கும். தொழிலில் தன்னம்பிக்கை, திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த வாய்ப்பு உருவாகும். தனிப்பட்ட ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

பெண்களுக்கு,  தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். கலைத் துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்துக்குத் தேவையான பணம் வரும். நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரம் அபிவிருத்தியாகும். 

பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு, கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும்.  பெற்றோரின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். உங்களின் மனத்தை எல்லோரும் புரிந்து நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6, 9

பரிகாரம்: தினமும் சிவன் கோவிலுக்குப் போய், தீபமேற்றி  வர நன்மைகள்  நடக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் நீங்கள் தன்னிறைவாக உணர்வீர்கள். சுணக்க நிலை மாறும். வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பணவரவு இருக்கும். தொழிலில் நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரம் அபிவிருத்தியாகும். பங்குதாரர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மை தரும்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனக்குழப்பமும் மறையும். தோற்றத்தில் பொலிவு உண்டாகும். குடும்பத்தினருக்காக நீங்கள் படும் கஷ்டம் தெரியவில்லையென்று வருத்தப்படுவீர்கள். வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமுகமாக நடைபெறும்.

பெண்களுக்கு, சகோதர சகோதரிகளிடம் கருத்துவேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். கலைத் துறையினருக்கு, பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  சக கலைஞர்களால் தொந்தரவுகள் நேரிடலாம். அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற நேரம் இது. மாணவர்களுக்கு, தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 3, 6, 9

பரிகாரம்: லக்ஷ்மி நாராயணரை வழிபடுவது நல்லது. பசுவுக்கு ஆகாரம் கொடுப்பது நல்லது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close