[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? -12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 08:31 am
  • அ+ அ-

மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும்.

ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம், ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.

கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும்.

சிம்மம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல் வரும்.

கன்னி: துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். அரைகுறையாக நின்ற வேலைகள் மளமளவென்று முடியும்.

துலாம்: வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள். யாரை நம்புவது என்கிற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

விருச்சிகம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். பணவரவு உண்டு.

தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

மகரம்: கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளை யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். மனைவிவழி உறவினரால் ஆதாயம் உண்டு.

மீனம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close