[X] Close

வார ராசிபலன் மார்ச் 18 முதல் மார்ச் 24 வரை (துலாம் முதல் மீனம் வரை)


18-24

  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 12:06 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் கடினமாகும்.

சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் செயல்திறன் கூடும். கடினமான பணியையும் சிறப்பாகச் செய்து, மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். அதிகாரப் பதவிகள் தேடிவரும்.

பெண்களுக்கு, சில முக்கியமான காரியங்களில் கூடுதலாக கவனம் செலுத்துவதனால் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு, வெளிநாட்டுப் பயணம் இருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

அதிர்ஷடக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, பிரவுன்

எண்கள்: 5, 8

பரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்தும் லாபகரமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனத்தால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கூடும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன்  மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். சிற்றின்பச் செலவுகள் கூடும். அக்கம்பக்கத்தவருடன் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது.

தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதியுதவியும் கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். அதிக வேலைப்பளு காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாமல்  போகலாம்.

பெண்களுக்கு, நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும்.மாணவர்களுக்கு, தேவையற்ற எண்ணங்களை  விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்திப் பாடங்களை  படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷடக் கிழமைகள்: செவ்வாய், சனி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: இளஞ்சிவப்பு, கருப்பு

எண்கள்: 7, 8

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த முயற்சிகள் கைகூடும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். தைரியம் கூடும்.  கண்நோய், பித்தம், வாதம் தொடர்பான நோய் ஏற்பட்டு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான  பொருட்களை  வாங்குவீர்கள். 

கணவன் மனைவிக்குள்  மகிழ்ச்சி நிலவும்.  பிள்ளைகளின்  கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தங்க நகை சேரும் காலகட்டம் இது.   தொழில், வியாபாரத்தில் நேரம் தவறி உண்ண நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம்.

பெண்களுக்கு புத்திசாதுரியம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பயணங்களின்போது கவனம் தேவை. பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு, பாடங்களில் சந்தேகம் கேட்கத் தயக்கம் வேண்டாம்.

அதிர்ஷடக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு

எண்கள்: 4, 7 

பரிகாரம்: நந்தீஸ்வரரை நெய் தீபம் ஏற்றி வணங்க கடன்சுமை குறையும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு இருக்கும். எடுத்த முடிவைச் செயல்படுத்துவதற்கு முன்னர் ஆலோசிப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டப்படுவீர்கள். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் கஷ்டம், சுகம் இரண்டும் ஏற்படலாம். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு, பேச்சு திறமையால் காரியங்களைச்  சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷடக் கிழமைகள்: ஞாயிறு, சனி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: கருநீலம், ஊதா

எண்கள்: 8, 9

பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க  உடல் ஆரோக்கியம் பெறும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகளைச் செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமாகச் செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

விருந்தினர்கள் வந்து செல்வார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதப் போக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சொல்லும் வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டியிருக்கும்.

சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம்.  அரசியல்வாதிகளின் முயற்சிகளில் தடை ஏற்படலாம். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும்  கூடுதல் கவனம் நன்மை தரும்.

அதிர்ஷடக் கிழமைகள்: வெள்ளி, சனி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, கருநீலம்

எண்கள்: 7, 8

பரிகாரம்: பாலகன் வடிவில் இருக்கும் முருகப் பெருமானை பாலாபிஷேகம் செய்து வழிபடுங்கள்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம்  பணவரவு அதிகரிக்கும். அறிவுத்திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்குள்ளாக நேரிடலாம். குடும்பத்தினருக்கு பெரியவர்களின்  ஆதரவும், மகிழ்ச்சியும் கிட்டும். நிம்மதியான சூழலை முன்கோபப் பேச்சுகளால் கெடுத்துவிட வேண்டாம்.

தொழில், வியாபார வளர்ச்சிக்கு சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். செலவைக்  குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். ரகசியங்களை வெளியில் கூறவேண்டாம். மேலதிகாரிகளின் நெருக்கடிகளில் துணைநின்று அன்பைச் சம்பாதிப்பீர்கள். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கக் கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளின் திட்டங்கள் பலிக்கும்.

வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்துகொண்டு பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷடக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, ஆரஞ்சு

எண்கள்: 7, 9 

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வணங்க முன்ஜென்மப் பாவம் தீரும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close