[X] Close

வார ராசிபலன் மார்ச் 18 முதல் மார்ச் 24 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


18-24

  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 12:00 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.  அலைச்சலால் சரியான நேரத்துக்கு உணவுண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்குவன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன் மனைவிக்குள்  நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத்  துணையால் ஆதாயம் உண்டாகும்.

குடும்பத்துடன் புண்ணியஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். உங்கள் பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடு மறையும். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகலாம்.

புதிய பொறுப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு  எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். மாணவர்களுக்கு,  கவனமாகப் பாடங்களைப் படிப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கித் தெளிவான சிந்தனை மேலோங்கும்.

அதிர்ஷடக் கிழமைகள்: செவ்வாய், புதன்

திசைகள்: தெற்கு, கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு

எண்கள்: 1, 2

பரிகாரம்:  விநாயகப் பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்குவதால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம்  தெளிவான  சிந்தனை தோன்றும். எந்தக் காரியத்தையும் ஆலோசை கேட்டுச் செய்து வெற்றி  காண்பீர்கள். உங்களது சாமர்த்தியமான செயல் கண்டு பிறர் ஆச்சரியப்படுவார்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

பிள்ளைகளால் மனம்மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, மனை, வாகன விஷயங்களில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடக் கூடுதலான லாபம் கிடைக்கும்.

வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தி நிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். பெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு எதையும் செய்யாமல் இருப்பது நன்மை தரும்.

வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்திலிருந்து செய்தி வரும். மாணவர்களுக்கு, அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷடக் கிழமைகள்: வெள்ளி, சனி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 5, 7

பரிகாரம்: அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்க கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் வாழ்க்கைக்குத் தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.  புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவதற்குத் திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனங்களை வாங்குவார்கள்.  எடுத்த காரியம் சிறிய முயற்சிக்குப் பின் நடைபெறும்.

குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளைத் தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. எந்திரங்கள், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு, நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்களுக்கு, உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும்.

அதிர்ஷடக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தெற்கு

நிறங்கள்: பச்சை, வெள்ளை

எண்கள்: 3, 4

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்மனை வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். செயல்களுக்குத்  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள்.

குடும்பத்தில் சின்ன சின்ன விசயங்களுக்குக் கூட பதற்றம் வரலாம்.  முழுமையாக எதையும்  ஆராய்ந்து முடிவெடுத்தால் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம்.

சம்பள உயர்வும் வரலாம். பெண்களுக்கு எதிலும்  மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கப் பெற்று சந்தோஷமடைவீர்கல். சுபப் பலன்கள் வந்து சேரும்.

அதிர்ஷடக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: ஊதா, இளம்பச்சை

எண்கள்: 1, 2 

பரிகாரம்: சனி பகவானை வணங்கி காகத்துக்கு எள்சாதம் வைப்பது உடல் ஆரோக்கியத்தைத் தரும். கஷ்டங்கள் குறையும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்துக்கு விரோதமாகக் காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனத்தில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவருக்கொடுவர் புரிந்து நடந்து கொள்வார்கள்.

சில முக்கிய முடிவுகளைச் சற்றுத் தள்ளி  வைப்பது உத்தமம். உறவினர்களின் வருகை இருப்பதால் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வர்த்தக ஆர்டர்கள் வருவதில் திருப்தி இருக்கும்.

உத்தியோகத்தில் அதிகப் பளு ஏற்படும். தொடர்ந்து பணிகளைச் சரியாக முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். உடனிருப்பவர்களுடன் எந்த ரகசியத்தையும் பகிர வேண்டாம்.  பெண்களுக்கு எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். 

அரசியல்வாதிகளுக்கு, தன்னம்பிக்கையுடன்  செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கல்விசார்ந்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷடக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

திசைகள்: மேற்கு, கிழக்கு

நிறங்கள்: கருஞ்சிவப்பு, ஆரஞ்சு

எண்கள்: 4, 5  

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கி வர துன்பமும், தொல்லையும்  நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளைதவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. இல்லத்துக்குத் தேவையானவற்றை வாங்கிக் குவிப்பீர்கள்.

அதற்கான நிதி வசதியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் வருவதில் தாமதம் ஏற்படும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதால்  கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில்  புத்திசாதுரியத்துடன் செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

உடனிருப்பவர்களிடம் கவனமாக இருங்கள். பெண்களுக்கு தயக்கமோ, பயமோ இருக்காது. எதையும் ஈடுபட்டுச் சிறப்பாகச் செய்வீர்கள்.

அரிசியல்வாதிகளுக்கு மகான்கள், பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் தடங்கலின்றி நன்றாகப் படிப்பீர்கள். ஆசிரியர்கள், பெற்றோர்களால் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷடக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: பச்சை, ஊதா

எண்கள்: 4, 7

பரிகாரம்: சிவன் கோயிலுக்குச் சென்று வணங்கி வர கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close