[X] Close

மாத சிவராத்திரியில் பிரதோஷம்; மறக்காம செய்யுங்க மகேச தரிசனம்!


pradhosham-sunday-maadha-sivaraathiri

  • வி.ராம்ஜி
  • Posted: 12 May, 2018 16:38 pm
  • அ+ அ-

சித்திரை மாதத்தின் நிறைவு பிரதோஷம் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமை. ஆகவே நாளை 13.5.18 ஞாயிற்றுக்கிழமை அன்று, மறக்காமல் சிவாலயம் சென்று தரிசியுங்கள். 

ஒவ்வொரு பிரதோஷமும் விசேஷம். பிரதோஷ நாளில், மாலை வேளையில் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும் நந்திதேவரிடம் பிரார்த்தனை வைப்பதும் மிகுந்த பலனைத் தரவல்லது என்பார்கள் ஆச்சார்யப்பெருமக்கள்.

அந்த நாளில், சிவனாருக்கு வில்வம் சார்த்தியும் நந்திதேவருக்கு அருகம்புல்லும் செவ்வரளியும் சார்த்தியும் பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

மேலும் பிரதோஷத்தன்று, நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் விமரிசையாக நடைபெறும். எனவே, நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, அபிஷேக தரிசனம் செய்வது, வீட்டில் உள்ள தரித்திர நிலையைப் போக்கும். சகல ஐஸ்வரியங்களையும் வழங்கும் என்பது உறுதி.

இன்னொரு விஷயம்... பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக்கிழமை அன்று ராகுகால நேரமும் மாலை 4.30 முதல் 6 மணி வரைதான். நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதோஷம் வருவதால், பிரதோஷ தரிசனத்தை, ராகுகாலவேளையில் ஆலயத்தில் இருந்தபடிசெய்கிறீர்கள். இது இன்னும் இன்னுமான இரட்டிப்புப் பலன்களை வாரி வழங்கும். தடைப்பட்ட காரியங்கள் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.

அதுமட்டுமா?

நாளைய தினம் மாத சிவராத்திரி. ஆக, சித்திரை மாதத்தின் நிறைவு சிவராத்திரி, சித்திரை மாதத்தின் நிறைவுப் பிரதோஷம் அதுவும் ஞாயிறு ராகுகாலவேளையில் சிவதரிசனம்... எல்லாம் சேர்ந்து, உங்கள் கவலைகளையெல்லாம் போக்கப் போகிறது. மறக்காமல் மகேசனைத் தரிசனம் செய்யுங்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close