[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 08:41 am
  • அ+ அ-

மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய நபரின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்: வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

மிதுனம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, சுமுக நிலை மலரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள்.

கடகம்: வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சொந்த பந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

சிம்மம்: எந்த விஷயத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவு வந்துபோகும். அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாதீர்கள்.

கன்னி: உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் அலைச்சல், செலவு அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது. காரியத்தில் நிதானம் அவசியம்.

துலாம்: சந்தர்ப்ப, சூழ்நிலைக்கேற்ப, சமயோசிதமாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணா மல் போன பொருட்கள், ஆவணங்கள் திரும்பக் கிடைக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். விஐபிக்கள் உதவுவார்கள்.

தனுசு: தள்ளிப்போன காரியங்கள் முடிவுக்கு வரும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.

மகரம்: முக்கிய அலுவல்களை மற்றவரை நம்பி ஒப்படைக்காமல், நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் சிறு வார்த்தை கள்கூட பெரிய மோதலில் போய் முடியும்.

கும்பம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பணவரவு உயரும்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும்.
 

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close