[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:41 am
  • அ+ அ-

மேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். பழைய கடனைத் தீர்க்கும் வழிகள் குறித்து யோசிப்பீர்கள்.

ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள்.

மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனதில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும்.

கடகம்: திட்டமிட்டது ஒன்று, நடப்பது வேறாக இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: எளிதில் முடியக்கூடிய காரியங்கள்கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். சிலர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொள்வார்கள்.

கன்னி: உங்களின் புது முயற்சிக்கு பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடன் பிரச்சினை தீரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். அடிக்கடி பழுதாகி, செலவு வைத்த வாகனம் சரியாகும்.

விருச்சிகம்: எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதரர் வகையில் சுபச்செலவு உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். வாயுக் கோளாறால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். எனவே உணவில் கட்டுப்பாடு அவசியம். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மகரம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாகனப் பழுது சரியாகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். கடன் உதவியும் கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.

கும்பம்: தடைபட்டிருந்த காரியங்கள் விரைந்து முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் வெற்றி கிட்டும்.

மீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். முன்கோபம் குறையும். சமூகத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close