[X] Close

உத்திரட்டாதி நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 12:55 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் தன்மை உடைய உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே.

இந்த வருடம் திடீர் டென்ஷன் உண்டாகும்.  நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக  வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காட்டுவதைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்காகப் பாடுபடுவீர்கள். அவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும் நிதானம் தேவை.

பெண்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது  நல்லது. எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.

perunkulam photo.jpg 

அரசியல் துறையினருக்குச் சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம்.

மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களைப் படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: முன்னோர்களை வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும்.

மதிப்பெண்கள்: 71% நல்ல பலன்கள் கிடைக்கும்

+ வேலைப்பளு அதிகரிக்கும்

- வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close