[X] Close

ரிஷபம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:49 am
  • அ+ அ-

-ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ரிஷப ராசி வாசகர்களே!

ஐந்தில் உழைக்கும் வாழ்க்கை தான் ஐம்பதில் மகிழ்ச்சி தரும் என்பதை முழுமையாக நம்பி அதற்கேற்ப உழைப்பவர்களே! உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த விகாரி ஆண்டு பிறப்பதால் திட்டவட்டமான முடிவுகள் எடுப்பீர்கள். ஏமாந்த தொகையும் கைக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தள்ளிப்போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்க வேண்டி வரும்.

புதன் லாப வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. சாதாரண நிலையிலிருந்து சாமான்ய நிலைக்கு முன்னேறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். இனி குழம்பாமல் பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சின்ன் சின்ன கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைய ஏற்பார்கள். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும்.

இந்த ஆண்டு முழுக்க சனியும் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் ஒருவிதப் படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வழக்கில் எதிர்தரப்பால் வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போகும். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும்.

சில உண்மைகளைச் சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கிவைப்பது நல்லது. திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பைக் குறையுங்கள்.

இந்த ஆண்டு முழுக்க ராகு உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதாலும், 8-ல் கேது நீடிப்பதாலும் எதிலும் நாட்டமின்மை, பிடிப்பற்ற போக்கு காணப்படும். சில நேரம் கறாராகப் பேசி சிலரின் மனதைப் புண்படுத்துவீர்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். கண் பார்வை யைக் பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் மற்றும் காது வலி வந்து போகும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வாகனத்துக்கான லைசன்ஸ், இன்சூரன்சைக் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாகி உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி செலவுகள் துரத்தும் இருந்தாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய நண்பர்கள் தேடி வருவார் கள். சொந்தபந்தங்களுக்காக அலைய வேண்டி வரும். கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 7-வது வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீிகச் சொத்தை உங்கள் ரசனைக்கேற்ப புதுப்பிப்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ஆனால், 28.10.2019 முதல் 27.03.2020 வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலைகள், ஒருவித பயம் வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தைச் சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என்று வருத்தப்படுவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.

rishabam 2.jpg

வியாபாரிகளே! வட்டிக்கு வாங்கிக் கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டீர்களே! இனி உங்களின் அணுகுமுறையை மாற்றி லாபமீட்டுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் கூடிவரும். கெமிக்கல், ஹோட்டல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து போவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! பணிகளை முடிப்பதிலிருந்த தேக்கநிலை மாறும். மேலதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வருடத் தொடக்கத்திலேயே பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும்.

பெண்களுக்கு: மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குரு ராசியைப் பார்க்க இருப்பதால் கணவர் உங்களைப் புரிந்து கொள்வார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடகிலிருந்த தங்க நகையை மீட்பீர்கள். நாத்தனாருக்கு இருந்த பிரச்சினையைத் தீர்த்து வைப்பீர்கள். மாமனார், மாமியார் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். ஆனால், அஷ்டமத்துச் சனி நீடிப்பதால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய பயம் வரும்.

இந்த ஆண்டு அனுபவ அறிவாலும், இங்கீதமான பேச்சாலும், மாறுபட்ட அணுகுமுறையாலும் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். நீர்மோரைத் தானமாகக் கொடுங்கள். வசதி, வாய்ப்புகள் அமையும்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close