[X] Close

இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 21 முதல் 27ம் தேதி வரை (துலாம் முதல் மீன ராசி வரை)


indha-vaaram-ungalukku-ippadithan

  • kamadenu
  • Posted: 21 Mar, 2019 09:28 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் சுபச்செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் இருந்த மனக்கஷ்டம் நீங்கும். மந்த நிலை மாறும். தொழில், வியாபாரக் காரியங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றைச் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பெண்களுக்கு, மனத்துணிவு அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். அரசியல்வாதிகள் எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் வேகத்தைக் காட்டாமல் மெத்தனமாகவே செய்யத் தோன்றும். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்திப் பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும்போது கவனம் தேவை.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி. l திசைகள்: மேற்கு, தென் மேற்கு. l நிறங்கள்: சிவப்பு, வெள்ளை. l எண்கள்: 3,5,6. l பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்குத் தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாக இருக்கும். பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியங்களைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தவருடன் சண்டைகள் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பங்குதாரர்களால் நன்மை உண்டாகும். நிதியுதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு, சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நடப்பதால் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினர் விளைவுகள் பற்றிய  கவலையின்றி எதிலும் இறங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைவதற்குக் கவனத்தைச் சிதற விடாமல் படிப்பது அவசியம்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி. l திசைகள்: வடக்கு, தென்மேற்கு. l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள். l எண்கள்: 1, 6, 9. l பரிகாரம்: மாரியம்மனைத் தீபம் ஏற்றி வணங்க எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் தடைகளைத் தகர்ப்பீர்கள். தொழில், வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைப்பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் இணக்கமான போக்கு காண்பது சிரமம். உறவினர்களை நம்பிக் குடும்ப விவகாரங்களைப் பேச வேண்டாம். பெண்களுக்கு, வீண்கவலை, எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். தாய்வழி உறவினர்களின் ஆதரவு உண்டு. கலைத் துறையினருக்கு, தொலைதூரச் செய்திகள் சந்தோஷத்தை அளிக்கும். அரசியல்வாதிகளுக்கு, பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினை தீரும். உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாகப் பாடங்களைப் படிப்பது நல்லது.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி. l திசைகள்: கிழக்கு, வடகிழக்கு. l நிறங்கள்: மஞ்சள். l எண்கள்: 3, 6. l பரிகாரம்: நவக்கிரகங்களை வணங்குவதால் தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால் பகை நேராது. திறமையாகச் செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலர் சொல்லும் வார்த்தைகள் மனவருத்தத்தைத் தரலாம். தொழில், வியாபாரத்தில் முக்கியமான முடிவுகளை ஆலோசித்தபின் எடுக்க வேண்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துடன் முரண்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தினருடன் கருத்து மோதல் நீங்கும். பெண்களுக்கு, உங்களது கருத்துக்குச் சிலர் மாற்றுக் கருத்து கூறலாம். கலைத் துறையினருக்கு, நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். அரசியல்வாதிகள், எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு எவ்வளவு திறமையாகப் படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல் தோன்றும். மனத்தைத் தளரவிடாமல் படிப்பது வெற்றியைத் தரும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி. l திசைகள்: தெற்கு, தென்கிழக்கு. l நிறங்கள்: சிவப்பு, பச்சை. l எண்கள்: 5, 6, 9. l பரிகாரம்: சனி பகவானுக்கு எள் சாதம் நைவேத்தியம் செய்து காகத்துக்கு வைக்க பிணிகள் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பணவரவு திருப்தி தரும். புதிய நபர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். புதிய வீடு, மனை, வாகன யோகம்  ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய வர்த்தக ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன பதவி உயர்வு, நிலுவைப் பணம் வந்து சேரலாம். கணவன் மனைவி சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பெண்களுக்கு, பணவரவு திருப்தி தரும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கலைத் துறையினர், எதையும் செய்யும் முன்னர் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, மனம்மகிழும் சூழ்நிலை உருவாகும். மாணவர்கள் சாமர்த்தியமான பேச்சால் மற்றவர் மனத்தில் இடம்பிடிப்பீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன். l திசைகள்: மேற்கு, தென்மேற்கு. l நிறங்கள்: சிவப்பு, நீலம். l எண்கள்: 1, 3. l பரிகாரம்: விநாயகப் பெருமாளுக்குத் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனக்கஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமடையப் பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். ஊதியமும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்துகொள்வது அவர்களது வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு, தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். கலைத் துறையினருக்கு, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலையைச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் அக்கறை தேவை.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி. l திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென் மேற்கு. l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள். l எண்கள்: 3, 6. l பரிகாரம்: முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில்  உதவி கிடைக்கும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close