[X] Close

ஒப்புகைச் சீட்டு நடைமுறை: தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும்- உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவிப்பு


6

  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 18:09 pm
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 22: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

 விபரீத ராஜ யோகம் பற்றி இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்பாக  சில வாசக அன்பர்கள், ஒரே கேள்வியைக் கேட்டிருந்தார்கள். அதற்கு விளக்கம் சொல்லுங்களேன். மிகப்பெரிய உபயோகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்கள். அவர்களின் கேள்வி, சந்தேகம்... உங்களுக்கே கூட பலகால சந்தேகமாகவும் கேள்வியாகவும் இருக்கலாம்.

அந்தக் கேள்வி... இந்தப் பரிகாரங்கள் செய்யவேண்டும் என ஜோதிடர்கள் சொல்லுகிறார்கள். அல்லது அந்தப் பரிகாரம் அனுபவத்தின் மூலம் யாரோ சொல்லுகிறார்கள். ஆனாலும் அந்தப் பரிகாரங்களைச் செய்யமுடியாமல், தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறதே ஏன்? என்ன காரணம்?

இதுதான் அவர்களின் கேள்வி.

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். கர்மவினை என்பதை அனுபவிக்கத்தான் நாம் இந்தப் பிறவியை எடுத்துள்ளோம். அந்த கர்ம வினையை, நாம் முழுமையாக அனுபவித்து முடித்தால்... பிறப்பற்ற மோட்ச நிலையை அடையலாம்.

ஆனால், அத்தனைக்கும் ஆசைப்படும் மனமானது எதையும் ஏற்பதே இல்லை. மாறாக எப்படியாவது தனக்கு வரும் பிரச்சினையை எந்த வழியிலாவது தாண்டிவிடவேண்டும் அல்லது வராமலேயே தடுத்துவிடவேண்டும் என நினைக்கிறது.

இது ஒருசில முக்கிய விஷயங்களுக்கு விதிவிலக்காக இருக்கலாம். உதாரணமாக திருமணத்தடை, அல்லது தாமதம், புத்திர பாக்கியம், நல்ல கல்வி இருந்தும் சரியான வேலை வாய்ப்பு இல்லாத நிலை,   பதவி உயர்வு தாமதமாதல் முதலான நிகழ்வுகளுக்கு பரிகாரங்கள் தேவைதான்.

ஆனால் பெரும்பாலும்  நம்மிடம் எதிர்பார்ப்பாக இருப்பது, பெரும் பணம், வழக்குகளில் சாதகம், எதிரிகளை வீழ்த்துவது, தொழிலில் அபார வளர்ச்சி காண்பது, அதிர்ஷ்டம் எதிர்பார்த்தல், எது நடந்தாலும் தானும் தன் குடும்பமும் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இந்தப் பட்டியல் இன்னுமே நீளம். இருந்தாலும் சிலவற்றை மட்டுமே உதாரணமாகச் சொல்லுகிறேன்.

சரி, என்னதான் பரிகாரங்களைக் கூறினாலும், அந்தப் பரிகாரங்களைச் செய்வதற்கும் நேரம் காலம் ஒத்துவரவேண்டும். அதாவது அந்த பரிகாரங்களைச் செய்வதற்கும் ஜாதகத்தில் நல்ல நேரம் என ஒன்று வந்தால்தான் அதைச் செயல்படுத்த முடியும்,

சென்னை மாநகரில் அளவு கடந்த செல்வவளம் கொண்ட ஒருவரின் மகன், அயல்நாட்டில் பெரும் நிறுவனத்தில் உயரிய பதவியில் இருக்கிறார்.தற்போது 39 வயது. இவரின் தந்தை என்னிடம் வந்தார். ‘மகனுடைய திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. என்ன காரணம்?’ என்று கேட்டார். 

நான் ஜாதகத்தை ஆய்வு செய்து, இரண்டு ஆலயங்களைக் குறிப்பிட்டு, அந்த ஆலயங்களுக்குச் சென்று வாருங்கள். உடனே திருமணம் கை கூடும் என பரிந்துரைத்தேன்.

இது நடந்து இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால் இன்னும் திருமணம் கைகூடவில்லை.

அவருடைய தந்தை, இடைப்பட்ட இந்தக் காலகட்டத்தில்,  ஐந்தாறு முறை வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று வந்துவிட்டார். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கோயிலுக்குச் செல்ல அவருக்கு முடியவில்லை. ‘பாருங்க சார். டைம் கிடைக்கவே மாட்டேங்கிது’ என்று அலுத்துக் கொண்டார்.

என்ன செய்வது? விதி வலியது.  குறிப்பிட்ட ஆலயங்களுக்குச் சென்று வந்தால்தான் அவருடைய மகனின் திருமணத்துக்கான தடை நீங்கும் என்பதை அவர் உணரவே இல்லை.

கோடி கோடியாக பணம் இருக்கலாம். ஆனால் பல விஷயங்கள் இறைவனின் கருணை இல்லாமல் நமக்கு ஒருபோதும் கிடைப்பதே இல்லை.

அதேசமயம்  இன்னொன்றையும் சொல்கிறேன். நான் சொன்ன பரிகாரத்தை கேட்டு 8 வருடங்களாக குழந்தை இல்லாத தம்பதி இன்று அழகான குழந்தையோடு இனிமையான வாழ்க்கை வாழ்ந்து வருவதையும் பார்க்கிறேன்.

ஆகவே பரிகாரங்கள் செய்வதற்கும் கொடுப்பினை வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இன்னொரு கோணத்தையும் இங்கே சொல்லியாகவேண்டும்.

வாழ்க்கையில் திருமணம் முக்கியமான விஷயம். குழந்தைச் செல்வம் என்பது மிக முக்கியமான விஷயம். நல்ல உத்தியோகம், தொழிலி அபிவிருத்தி என்பதெல்லாம் உயர்ந்த விஷயங்கள். இதுமாதிரியான மிகப்பெரிய விஷயங்களுக்கு, ‘இந்தக் கோயிலுக்குப் போ, அந்தக் கோயிலுக்குப் போ’ என்று சொல்கிறார்களே... அப்படிப் போனால், இவ்ளோ பெரிய பிரச்சினை தீர்ந்துவிடுமா என்ன?’ என்று அலட்சிய மனோபாவமும் பலருக்கு இருக்கிறது. இதை அவர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும். எவ்வளவு பெரிய பூட்டு இருந்தாலும் அதன் சாவித்துவாரமும் சிறிதுதான். சாவியும் சிறிய அளவுதான். ஆக, இப்படியும் இருக்கலாம் என புரிந்து கொள்ளவேண்டும்.

தெருப்பிள்ளையார், மிகச் சிறிய கோயிலில்தான் இருக்கிறார். ஆனால் அவரின் மகிமையையும் பேரருளையும் அளவிடவே முடியாது. உங்களுக்கு சந்திராஷ்டம தினம் என்றைக்கோ, அன்றைய நாளில், விநாயகரை தரிசித்து, சிதறுகாய் அடித்து வேண்டிக்கொள்ளுங்கள். சந்திராஷ்டம பாதிப்பு நம்மை அண்டவே அண்டாது! இந்தப் பரிகாரத்திற்கு நீங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டிக்குத்தான் செல்ல வேண்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரைத்தான் தரிசிக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. தெருவில் முச்சந்தியில் உள்ள பிள்ளையார், அரசமரத்தடியில் உள்ள பிள்ளையாரைத் தரிசித்தாலே போதுமானது.

அதே சமயம், பரிகாரங்கள் மூலம் நாம் தள்ளிப் போடுகின்ற வினை முழுவதும் நம்மை விட்டு அகலுவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இவை அனைத்தும் “தள்ளி வைக்கப்படுபவையே” என்பதை உணருங்கள்.

சரி... இப்படி தள்ளி வைக்கப்படும் பிரச்சினைகள் என்னாகும்?

இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் பிற்காலத்தில் மொத்தமாக வரலாம் அல்லது அடுத்த பிறவியில் சேர்க்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

‘அட ஆமாங்க. இதான் பரிகாரம்னு சொன்னாங்க. ஆனா அந்தப் பரிகாரத்தைச் செய்யவே இல்லீங்க. இப்படி பரிகாரம் செய்யாம வுட்டுட்டா, என்னங்க பண்றது? இதுக்கும் எதுனா பரிகாரம் இருந்தா சொல்லுங்களேன். சேர்த்து பண்ணிடுறோம்’ என்று வெள்ளந்தியாய்க் கேட்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

முடிந்த வரை, எந்தப் பிரச்சினையையும் அனுபவித்து முடித்து விடுங்கள். வறுமை, ஏமாற்றம், அடுத்தவர் உண்டாக்குகிற துரோகம், முக்கியமாக நம்பிக்கைத் துரோகம் உட்பட சகலத்தையும் பல் கடித்து தாண்டுங்கள். இவை, அந்த நேரத்தில் ஒரு வெறுமையை, விரக்தியைத் தந்தாலும், நல்ல நேரம் வரும்போது வாழ்க்கை அழகானதாக மலரும். அற்புதமாக மாறும். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். உங்களைப் புத்துணர்ச்சிமிக்கவர்களாக வடிவமைக்கும்.  

எதற்கெடுத்தாலும் பரிகாரங்களை எதிர்பார்த்து ஜோதிடரிடம் செல்லாதீர்கள். சிறிய தலைவலியைத் தாங்கிக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும். இதுதான், பின்னாளில் பெரிய வலிகளையும் தாங்கிக்கொள்ளும் சக்தியையும் தைரியத்தையும் பொறுமையையும் நிதானத்தையும் கொடுக்கும்!

இப்போது சாதாரண தலைவலி வந்தால் உடனே நிவாரணம் பெறுவதற்கு, ஒருமாத்திரையைப் போடுபவர்கள், எதிர்காலங்களைச் சந்திக்க அச்சப்படுகிறார் என்று அர்த்தம்.  எதையும் எதிர்கொள்ளும்  பக்குவம் வந்துவிட்டால் ஜோதிடரின் உதவியே தேவைப்படாது.

இவனை நம்புபவர்களுக்கு சோதனைகள் ஆயிரமாயிரம் வந்தாலும் கடவுள் நம்மை கை ஒருபோதும் விடுவதே இல்லை, இதை நிரூபிக்க கடவுள் நேரில் வந்தால்தான் நம்புவேன், என்றால் இறைவன் ஏதாவதொரு வடிவத்தில் உங்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பதை உணரும் சக்தியும் ஒருமித்த சிந்தனையும் நமக்கு வேண்டும்.

அடுத்து, விபரீத ராஜயோகம் பற்றிப் பார்ப்போமா?

- தெளிவோம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close