[X] Close

தேர்தல் அதிகாரிகளுடன் நமீதா வாக்குவாதம் செய்தாரா?- கணவர் விளக்கம்


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 11:38 am
  • அ+ அ-

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 

ரிஷபம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

மிதுனம்: தாயாருடன் எதிர்பாராத வகையில் மனஸ்தாபம் வரும். சாலையைக் கடக்கும் போது கவனம் தேவை. மின்சார சாதனங்கள் பழுதாகும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தாமதமாக பணம் வரும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்: தொட்ட காரியங்கள் யாவும் வெற்றி பெறும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும்.

கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

துலாம்: தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்களும், பிரச்சினைகளும் வரக்கூடும். திடீர் பயணம் உண்டு.

தனுசு: பழுதாகியிருந்த வாகனத்தை சீர்படுத்துவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். புண்ணியத்தலங்களுக்குச் செல்வீர்கள்.

மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விலகியிருந்த பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்.

மீனம்: ஆன்மிக ஆற்றல் கிட்டும். எதிர்காலம் குறித்த உங்களின் கணிப்பு பெரும்பாலும் சரியாகவே இருக்கும். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் மதிப்பார்கள். 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close