[X] Close

மோடி பணமதிப்பிழப்பால் பொருளாதாரத்தை அழித்தார் காங்கிரஸ் சீரமைக்கும்: ராகுல் காந்தி பேட்டி


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 17:28 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். எதிரிகளால் பிரச்சினை தீரும். நண்பர்களிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இனிமையான பேச்சினால் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு  எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து  முடிக்க அலைய வேண்டி இருக்கும். பெண்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்கள் செயல்திட்டங்களைக் கூறுவதைத் தவிர்ப்பது நல்லது.அரசியல்வாதிகளுக்கு மேலிடம்  கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில்  திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி திசைகள்: மேற்கு, வடமேற்கு நிறங்கள்: வெள்ளை, பச்சை எண்கள்: 5, 6 பரிகாரம்: சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.மனமகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு அதிகப்படும். பொருளாதாரத்தில் மேன்மை ஏற்படும். சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும்.  தொழில், வியாபாரம் நிதானமாக இருக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.புதிய வர்த்தக ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகப் பணிகளால் பதற்றம் உண்டாகும்.குடும்பத்தினரிடம் கோபமாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும். தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினருடன் சில்லறைச் சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.பெண்களுக்கு அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.  தெய்வபக்தி அதிகரிக்கும். கலைத் துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, வாக்குவன்மையால் காரிய வெற்றி உண்டாகும் மாணவர்களுக்கு, கல்வியைப் பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் புரிந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய் திசைகள்: வடக்கு, வடமேற்கு நிறங்கள்: வெள்ளை, சிவப்பு எண்கள்: 2, 9 பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் உல்லாசப் பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணியக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத திருப்பங்கள் நேரும். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் திறமை இருக்கும். தொழில்,வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேலதிதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளைத் திறமையாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி  மீண்டும் வந்து சேருவார்கள். பெண்களுக்கு, எந்த பிரச்சினை வந்தாலும் அதைச் சமாளிக்கும் திறமை உண்டாகும். கலைத் துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல்வாதிகளுக்கு, தேவையற்ற  பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும்.மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம்  காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன் திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு நிறங்கள்: மஞ்சள், வெள்ளை எண்கள்: 3, 5 பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து கடவுளை வழிபடவும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல்நலத்தில் மேம்பாடு இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்து முடித்து வெல்வீர்கள். வீண்கவலைகள் நீங்கும். உங்களிடம் கொடுக்கபட்ட எந்தவொரு வேலையையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். பங்குதாரர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடி பணிகள் சங்கடத்துக்கு ஆளாகலாம். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம். பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு, விருப்பமற்ற பயணம் செல்ல நேரிடலாம். கலைத் துறையினருக்கு பணவரவு அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி  இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சாமர்த்தியமாகப் பேசுவதன்  மூலம் வளர்ச்சி காண்பீர்கள். மாணவர்களுக்கு,  விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாகத் தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன் திசைகள்: தெற்கு, தென்கிழக்கு நிறங்கள்: வெள்ளை, நீலம் எண்கள்: 2, 5 பரிகாரம்: சனிபகவானுக்கு எள் சாதம் நைவேத்தியம் செய்து காகத்துக்கு வைக்கப் பிணிகள் நீங்கும்.

****************************************************************************************************************************************************

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு கூடும். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும்,  அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது  ஏற்பட்ட தடங்கல்  நீங்கும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.உத்தியோகத்தில் வேலைகளை விரைந்து முடிப்பதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய  வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். பெண்களுக்கு, கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு போட்டிகள் அகலும்.தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு, கல்வியில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி திசைகள்: மேற்கு, தென்மேற்கு நிறங்கள்: நீலம் எண்கள்: 6, 9 பரிகாரம்:  விநாயகருக்கு தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும்.

****************************************************************************************************************************************************

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்தக் காரியத்தையும் செய்து முடிக்கும் வல்லமை வந்து சேரும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். பழைய  பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில்  கடுமையாக உழைக்க வேண்டி  இருக்கும். எடுத்த வேலையைச் செய்து முடிப்பதற்கு தடங்கல்கள் உண்டாகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  பெண்கள் எடுத்த காரியத்தைச் செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு வீண்குழப்பம், காரியத் தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு கவனத் தடுமாற்றம் உண்டாகலாம். எதிர்பார்த்தபடி ஒப்பந்தங்கள் கிடைப்பது தாமதமாகலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெறக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிக்கன நடவடிக்கை கைகொடுக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன் திசைகள்: வடக்கு, வடகிழக்கு நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 3, 9 பரிகாரம்: திருப்புகழ் பாடி முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close