[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 06:44 am
  • அ+ அ-

மேஷம்: ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். பணவரவு உண்டு.

ரிஷபம்: அலைச்சல், டென்ஷன் இருக்கும். உங்களின் முன்கோபத்தால் நட்பை இழக்க வேண்டியது வரும். காரியத்தில் நிதானம் அவசியம். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

மிதுனம்: குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் வரும். சகோதரர்களால் டென்ஷன், ஏமாற்றம் வந்து செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். தடைபட்டிருந்த சில காரியங்களை இன்று முடிப்பீர்கள்.

சிம்மம்: சோம்பல், களைப்பு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

கன்னி: எதிலும் வெற்றி, மகிழ்ச்சி உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிக்கவும் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

துலாம்: பிள்ளைகளுக்கு அலைச்சலும், ஆரோக்கியக் குறைவும் ஏற்படக் கூடும்.  பயணங்களும், செலவுகளும் வந்து கொண்டேயிருக்கும். மாலை முதல் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தன்னிச்சையாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். காரியங்களில் அவசரம் வேண்டாம். ஆடை, ஆபரணங்கள் சேரும். 

தனுசு: நினைத்த காரியங்கள் எல்லாம் சுலபமாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: செல்வாக்குக் கூடும். வெள்ளி ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு வாங்குவது, விற்பது நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு லாபகரமாக முடியும்.

கும்பம்: ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். பணவரவு திருப்தி தரும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close