[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 11 Mar, 2019 09:17 am
  • அ+ அ-

மேஷம் : தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது அவசியம். வீட்டிலும், வெளியிலும் மற்றவரை அனுசரித்துச் செல்லுங்கள். எல்லாவற்றுக்கும் அடுத்தவரைக் குறை கூறாதீர்கள்.

ரிஷபம் : குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திடுவது, ஜாமீன் தருவது வேண்டாம். இடையூறுகள், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

மிதுனம் : கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

கடகம் : சிந்தனைத் திறன் பெருகும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். திருமண முயற்சி கைகூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

சிம்மம் : தடைபட்ட வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.

கன்னி : தாழ்வு மனப்பான்மைக்கு இடம் தராமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடவேண்டாம்.

துலாம் : உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

விருச்சிகம் : குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

தனுசு : பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். நட்பு வட்டம் விரிவடையும். காரியத்தில் நிதானம் தேவை.

மகரம் : குடும்பத்தினரின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்பீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

கும்பம் : திட்டவட்டமாக செயல்பட்டு முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

மீனம் : புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close