[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 10 Mar, 2019 08:36 am
  • அ+ அ-

மேஷம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். யாருக்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: சகோதரர் வகையில் சின்னச்சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும். மனைவியுடன் எதிர்பாராத வகையில் கருத்து மோதல்கள் உண்டாகும்.

மிதுனம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்: சவாலான காரியங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்துவந்த மோதல்கள் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். விருந்தினர் வருகை உண்டு.

கன்னி: கணவன் - மனைவிக்குள் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது கலக்கமடைவீர்கள். 

துலாம்: அடிமனதில் நிலவிய கலக்கம் நீங்கும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு.

விருச்சிகம்: மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டை ரசனைக்கேற்ப விரிவுபடுத்துவீர்கள். 

தனுசு: திடீர் யோகம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

மகரம்: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: மனதில் நிலவிய கோபம், வெறுப்பு குறையும். தடைபட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

மீனம்: முயற்சிகள் வெற்றியடையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் விழாக்களுக்கு நன்கொடை வழங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close