சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ பந்தக்கால் நடும் விழா


கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

சைவ திருத்தலங்களில் முதன்மையான சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன மஹா உற்சவம் ஜூலை மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று (ஜூன்.17) காலை சிதம்பரம் நடராஜர் ஆனித் திரு மஞ்சன மகோத்சவம் தொடக்கமாக காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை புண்யாகவாசனம் பூஜைகள் நடந்து.

கம்பத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். ஆனி திருமஞ்சன தரிசன உற்சவ நிகழ்வுக்கு வெளிநாடு, வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஆயிரக் கணக்கான குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.