[X] Close

மகா சிவராத்திரி - 2ம் கால பூஜை நேரம்


maha-sivarathiri

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Mar, 2019 10:01 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

மகா சிவராத்திரி நன்னாள் இன்று (4.3.19 திங்கட்கிழமை). இந்தநாளில், இரவு முழுவதும் சிவனாருக்கு குளிரக்குளிர அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும்.

மொத்தம் நான்கு கால பூஜைகள் நடைபெறும். முதல் கால பூஜையை அடுத்து இரண்டாம் கால பூஜை நடைபெறும் நேரத்தைப் பார்ப்போமா?

2ம் கால பூஜை நேரம் :

இரவு 11 மணி முதல் 12.30 மணி வரை 2ம் கால பூஜையானது நடைபெறும். அப்போது, சர்க்கரை, நெய், பால், தயிர், பழம்  முதலானவற்றால் சிவலிங்கத் திருமேனிக்கு குளிரக்குளிர பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்.

பச்சைக்கற்பூரம் மற்றும் பன்னீர் முதலானவற்றைச் சேர்த்து அலங்கரிக்கப்படும். துளசி மற்றும் மரகதமும் ரத்தினமும் கொண்ட ஆபரணங்களால் அலங்கரிப்பார்கள்.

செண்பக மலர்களாலும் தாமரைப் பூக்களாலும் அர்ச்சிப்பார்கள். அப்போது, அகில் கொண்டு தூப தீபம் காட்டப்படும். நட்சத்திர தீபம் ஏற்றி ஆராதனை செய்யப்படும்.

அப்போது, 2ம் கால பூஜையில், பலாப்பழ நைவேத்தியம் மற்றும் பாயச நைவேத்தியம் செய்து பூஜிப்பார்கள். இந்த வேளையில் சிவபுராணம் படிப்பது சிறப்பு. தேவாரமும் திருவாசகமும் பாராயணம் செய்யலாம்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close