[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 08:36 am
  • அ+ அ-

மேஷம்: தொலைநோக்கு சிந்தனை அதிகரிக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள் வீர்கள். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள். 

ரிஷபம்: சவாலான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். அடுத்தடுத்து செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். 

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் பயணம் உண்டு. 

கடகம்: சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். 

சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தில் அனைவரும் ஏற்பார்கள். மகளுக்கு எதிர்பார்த்திருந்த நல்ல இடத்தில் திருமணம் கூடி வரும்.

 கன்னி: கவுரவப் பதவி தேடி வரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது வேலை அமையும். அரசால் அனு கூலம் உண்டாகும். வீடு, வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். 

துலாம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக செயல்பட்டு முடித்துக் காட்டுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நவீன கலைப்பொருட்கள் சேரும்.

 விருச்சிகம்: கடனாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி செலுத்துவீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

 தனுசு: வேலைச்சுமை அதிகரிப்பால் உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தினருடன் செலவிட முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். 

மகரம்: குடும்பத்தில் அடுத்தடுத்து சுபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகையால் வீடு கலகலப்பாகும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள். 

கும்பம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில், பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

மீனம்: நிர்வாகம், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் அமையும். நவீன மின்சாதனம் வாங்குவீர்கள்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close