[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 08:27 am
  • அ+ அ-

மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதால் வீண்பழி சொல்லுக்கு ஆளாவீர்கள். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.

கடகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குலதெய்வப் பிராத்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு

சிம்மம்: அடிமனதில் இருந்துவந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகள் எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகள் முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வீர்கள்.

கன்னி: உங்களின் குறிக்கோளை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும். உங்களைத் தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். விருந்தினர் வருகை உண்டு.

விருச்சிகம்: உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம்.

தனுசு: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம்பக்கத்தினர் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் ஏற்படக் கூடும்.

மகரம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கும்பம்: பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தைரியமான முடிவு எடுத்து வெற்றி காண்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

மீனம்: மனக்குழப்பம் விலகும். உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close