[X] Close
 

2018; மீன ராசி; 100க்கு 70 ... நீங்கதான் வைராக்கிய புருஷர்! 


2018-vilambi-year-meenam-rasi-palan

  • kamadenu
  • Posted: 13 Apr, 2018 18:42 pm
  • அ+ அ-

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

சாதகம்:

குருபகவானை ராசிநாதனாகக் கொண்டு, சித்தர்களின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே, இந்த ஆண்டில் நண்பர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள். செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகத்திலும் லாபம் கிடைக்கும். விரக்தி மனப்பான்மையை விட்டொழியுங்கள். நம்பிக்கையுடன் காட்சியளிப்பீர்கள். மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பீர்கள்.

ஆலயத் திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழடைவீர்கள். மனதில்  வைராக்கியம் கூடும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும். இல்லத்தில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி  செய்வீர்கள். மனதிற்கினிய விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பயணங்களால் நன்மை உண்டு. எதிர்மறையான எண்ணங்கள் மறையும். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.

பாதகம்:

முதலீடுகளில் கவனமுடன் இருப்பது நல்லது. தீர ஆலோசித்து முடிவு எடுங்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பார்ட்னர்களிடம் கவனமாக இருக்கவும். தேவையில்லாமல் எவர் குறித்தும் கருத்து சொல்லவேண்டாம். அதுவே பெரிய பிரச்சினையாகலாம். அதிக லாபம் எதிர்பார்த்து அகலக்கால் வைக்காதீர்கள். படிப்படியாக கிடைக்கும் லாபத்தில் கவனம் செலுத்தினால் நிம்மதி அடையலாம்.

மதிப்பெண் :  உங்களுக்கு 70% நல்ல பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம்: மாதந்தோறும் வருகிற சஷ்டி நாளில், முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். மிகுந்த நன்மை தரும். துன்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். மனோபயம் விலகும். மனோபலம் பெருகும்.

சிறப்பு பரிகாரம்: பிராணிகளுக்கு உணவளியுங்கள். வாழ்வில், உன்னதமான உயர்வைக் காண்பீர்கள்.  

எளிய பரிகாரம்: தினமும் வீட்டில் ஓம் என்ற மந்திரத்தை 21 முறை சொல்லுங்கள். இல்லத்திலும் உள்ளத்திலும் நல்ல நல்ல நேர்மறை என்ணங்கள் மேலோங்கும்.

நிறங்கள்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தை பயன்படுத்துங்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். எப்போதும் சந்தோஷம் நிச்சயம்.

* பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

* மனதில் சஞ்சலம் ஏற்படலாம்.

 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close