[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 22 Feb, 2019 08:59 am
  • அ+ அ-

மேஷம்: இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.

ரிஷபம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மிதுனம்: கடந்த காலத்தில் நிகழ்ந்த இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாயாருடன் கருத்துமோதல் ஏற்படக்கூடும். வாகனத்தை இயக்கும்போது எச்சரிக்கை தேவை.

கடகம்: பிரச்சினைகளைத் தீர்க்க வழி பிறக்கும். வேற்றுமொழி பேசுபவரின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் வரும். பணவரவு உண்டு.

சிம்மம்: பணத்தட்டுப்பாடு நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

கன்னி: மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு மிக அவசியம். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். 

துலாம்: தவிர்க்க முடியாத செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். சகோதரர் வகையில் அன்புத் தொல்லை அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். பங்கு வர்த்தகத்தில் லாபம் உண்டு. மனைவி ஆதரவாகப் பேசுவார். மனைவிவழி உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள்.

தனுசு:  சமூக அந்தஸ்து உயரும். உறவினர் வீ்ட்டு சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும்.

மகரம்: தன்னம்பிக்கை பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும்.. யோகா, தியானம் என மனதை நிலைப்படுத்துவீர்கள். பண வரவு உண்டு.

கும்பம்: இரவுப் பயணங்களை கூடியமட்டும் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகள் விஷயத்தில் அதிகக் கண்டிப்பு காட்டாதீர்கள்.

மீனம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close