கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம்


தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவியில் பிரசித்த பெரியநாயகி உடனுறை சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடியேற்றப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.

விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமியின் திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 21-ம் தேதி நடைபெறுகிறது. பல ஆண்டுகளாக தடைபட்டு நின்ற கண்டதேவி கோயில் தேரோட்டம் இந்த ஆண்டு நடைபெறுகிறது.