[X] Close

திருப்பாம்புரம் வந்தால் ராகு - கேது தோஷம் விலகும்! கல்யாண வரம், பிள்ளை வரம், பதவி உயர்வு உறுதி!


thirupampuram

திருப்பாம்புரம்

  • வி.ராம்ஜி
  • Posted: 13 Feb, 2019 10:01 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

திருப்பாம்புரம் திருத்தலத்துக்கு வந்தால், ராகு கேது முதலான சர்ப்ப தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் திருப்பாம்புரமும் ஒன்று. காவிரி தென்கரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்றுள்ள 59வது திருத்தலம் எனும் பெருமை கொண்ட தலம் இது.

பாம்பு தொழுத திருத்தலம் என்பதால், இதற்கு திருப்பாம்புரம் எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். ஞானசம்பந்தர், இந்தத் தலத்தை பாம்புர நன்னகர் என்று போற்றிப் பாடுகிறார். மேலும் நாவுக்கரசராலும் சுந்தரராலும் பாடப்பட்ட திருத்தலத்துக்கு அருணகிரிநாதரும் திருப்புகழ் பாடியிருக்கிறார் எனும் பெருமைகள் பலவற்றை ஒருங்கே கொண்ட தலம் என்று போற்றிக் கொண்டாடுகின்றனர் பக்தர்கள்!

இங்கு வந்து வேண்டிக்கொண்டால், கால சர்ப்பம் முதலான தோஷங்கள் நீங்கும். பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம். ராகு கேது முதலான கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்!

இங்கே உள்ள மூலவரின் திருநாமம் ஸ்ரீசேஷபுரீஸ்வரர். நாகமானது, இந்தத் தலத்துக்கு வந்து, இந்த சிவலிங்கத் திருமேனியை பூஜித்து வரம் பெற்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

அம்பாளின் திருநாமம் ஸ்ரீபிரம்மராம்பிகை. வண்டாகுழலி அம்பாள் எனும் திருநாமமும் உண்டு. இங்கு உள்ள தீர்த்தம் ஆதிசேஷ தீர்த்தம் எனப்படுகிறது. கோயிலின் ஸ்தல விருட்சம் வன்னிமரம். நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் பேரளத்துக்கு அருகில் திருமீயச்சூர் கோயிலில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாம்புரம் திருத்தலம்.

கல்யாணம், தள்ளிக்கொண்டே போகிறதே என்பவர்கள், எவ்வளவு உழைத்தாலும் கைநிறைய சம்பளமோ பதவி உயர்வோ கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்கள், கால சர்ப்ப தோஷத்தால், சகல காரியங்களிலும் தடைகள் வந்து வெற்றி பெறமுடியாமல் சிக்கல்கள் இருக்கின்றனவே எனக் கலங்குவோர் இங்கு வந்து திருப்பாம்புரம் சிவனாரை மனதார வழிபட்டால், மங்கல காரியங்கள் யாவும் கைகூடும். சம்பள உயர்வும் பதவி உயர்வும் நிச்சயம். தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close