[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:47 am
  • அ+ அ-

மேஷம்: முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாக செய்து முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும், சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
**
ரிஷபம்: உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்காமல், யோசித்து செயல்படுங்கள். நன்றி மறந்தவர்களை நினைத்து வருந்துவீர்கள். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
**
மிதுனம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். நல்ல சேதி கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பேச்சில் கவனம் தேவை.
**
கடகம்: உறவினர், நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் அடைவீர்கள். வீண் செலவைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
**
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.
**
கன்னி: குடும்பத்தில் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.
**
துலாம்: சகோதர உறவுகளால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள்.
**
விருச்சிகம்: திடீர் பணவரவு, பொருள் வரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வழக்கில் சாதகமான திருப்பம் வரும். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும்.
**
தனுசு: உறவினர்கள் மத்தியில் உங்கள் கை ஓங்கும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லைகள் குறையும். குடும்பத்தோடு சென்று, நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
**
மகரம்: வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. பெற்றோர் வகையில் மருத்துவச் செலவுகள் வந்துபோகும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும்.
**
கும்பம்: போட்டி, சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் அனுபவம் தெரியும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சினையில் சுமுக தீர்வு கிடைக்கும்.
**
மீனம்: குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஓய்ந்து மகிழ்ச்சி திரும்பும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உற்சாகம், நம்பிக்கை அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close