பிரச்சினைகள் தீர்க்கும் சஷ்டி தரிசனம்

ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானையுடன் முருகப்பெருமான்
வி.ராம்ஜி
சஷ்டி நாளில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் கவலையெல்லாம் பறந்தோடச் செய்வார் வேலவன்!
மாதந்தோறும் வருகிற சஷ்டி திதியில், முருகக் கடவுளை நினைத்து விரதம் இருப்பதும் முருகன் துதிகளைப் பாராயணம் செய்வதும் விசேஷம். மேலும் இந்தநாளில், முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வது கூடுதல் பலன்களைத் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
இதோ... இன்று சஷ்டி தினம். சோம வார சஷ்டி. சோம வாரம் எனப்படும் திங்களன்று, தந்தை சிவபெருமானுக்கு உரிய நன்னாளில், மைந்தன் முருகப்பெருமானின் சஷ்டியும் இணைந்து வருவது ரொம்பவே சிறப்பு.
எனவே இந்தநாளில், கந்த சஷ்டிக் கவசம் பாராயணம் செய்யுங்கள். வீட்டில் காலையும் மாலையும் முருகக் கடவுளை நினைத்து விளக்கேற்றுங்கள். வீட்டில் உள்ள சின்னச் சின்னப் பிரச்சினைகள் கூட காணாமல் போகும். சந்தோஷம் வீட்டில் நிறைந்திருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்!
முருகனுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே செம்பருத்தி, சிகப்பு ரோஜா, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி, அழகன் முருகனை கண்ணாரத் தரிசித்து, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து உங்கள் வேண்டுதல்களை மனதாரக் குறைகளைச் சொல்லுங்கள்.
உங்கள் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வான் சக்திகுமாரன். தீராத வினைகள் அனைத்தையும் தீர்த்தருள்வான் வேலவன்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- ரஜினியை கமல்னு, கமலை ரஜினின்னு கூப்பிட்டிருக்கேன்! இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கலகல
- ‘சிவாஜி அண்ணனுக்கு கம்மியான டயலாக்கா?’ மகேந்திரனின் ‘தங்கப்பதக்கம்’ நினைவுகள்
- ‘பாக்யராஜ் பத்தி தப்புக்கணக்கு போட்டுட்டேன்! - இளையராஜா ஓபன் டாக்
- ‘சர்வம் சுந்தரம்’ பாட்டு; நான் நிதானத்துலயே இல்ல; ஏவிஎம் செட்டியார் சொன்ன ஒத்தை வார்த்தை! - கவிஞர் வாலி ஞாபகங்கள்