[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


intha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 09:17 am
  • அ+ அ-

மேஷம்: பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன் பிரச்சினைகளை சாதுர்யமாகப் பேசி தீர்ப்பீர்கள். மின்சாதனங்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்களால் செலவுகள் அதிகரிக்கக் கூடும்.

ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் விலகும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.

மிதுனம்: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கடகம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

சிம்மம்: வேலைச்சுமை, டென்ஷன், நண்பர்களுடன் கருத்துமோதல் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அவசரம் காட்ட வேண்டாம். சொந்தபந்தங்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். 

கன்னி: குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை நிலவும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.

துலாம்: தன்னம்பிக்கை துளிர்விடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகளின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: திட்டமிட்டக் காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் உறவினர் மத்தியில் பெருமை உண்டாகும். 

தனுசு: விலகியிருந்த பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாயாருடன் கருத்துமோதல்கள் ஏற்படலாம். 

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

கும்பம்: உங்களது பேச்சில், செயலில் புத்திசாலித்தனம் வெளிப்படும். பழைய பிரச்சினைகளை சுமுகமாகப் பேசி முடிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

மீனம்: புதியவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை மேலும் அதிகரிக்கும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close