[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 09:18 am
  • அ+ அ-

மேஷம்: பிறமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர் வருகை உண்டு. பழைய நண்பர்களால் தொல்லை ஏற்படக் கூடும். 

ரிஷபம்: எதிலும் வெற்றி கிட்டும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பங்கு வர்த்தகம் மூலம் லாபம் வரும். வாகனம், வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கடகம்: சமயோசிதமாகச் செயல்பட்டு காரியங்களைச் சாதிப்பீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை எதிர்பாராது சந்திப்பீர்கள். கோயில் விழாக்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்லுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். தொண்டைப் புகைச்சல், காய்ச்சல் வந்து நீங்கும். மனைவியுடன் மனத்தாங்கல் ஏற்படலாம்.

கன்னி: மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தந்தைவழி சொத்து கைக்கு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். பணவரவு திருப்தி தரும்.

விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். தோற்றப் பொலிவு கூடும்.

தனுசு: பழைய சிக்கல்களுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களை எதிர்பாராது சந்தித்து மகிழ்வீர்கள்.

மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வருவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

கும்பம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் குதூகலம் ஏற்படும்.

மீனம்: வீண் செலவுகள் வரக்கூடும். எதிர்பாராத வகையில் உறவினர்களுடன் பகை, நண்பர்களுடன் மனத்தாங்கல் வரக்கூடும். சிலை வேலைகளை பலமுறை அலைந்து முடிப்பீர்கள்.

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close