[X] Close

ராகு - கேது பெயர்ச்சி: பூரட்டாதி நட்சத்திரப் பலன்கள்


raaghu-kedhu-peyarchi-poorattadhi

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 10:23 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூரட்டாதி:

கிரகநிலை:

ராகு பகவான் உங்கள் பத்தாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்கள் இருபத்தி நான்காம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

நயமான வார்த்தைகள் பேசி பலரது நன்மதிப்பையும் பெறும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே!

இந்தப் பெயர்ச்சியில் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம்.

அடுத்தவர்களுக்கு உதவப் போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. உங்களைச் சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.  புதியதாக இடம் வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாகப் பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.

குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது வார்த்தைகளை கோர்த்துப் பேசுவது முக்கியம்.

பெண்கள், சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சினை உண்டாகலாம்.

அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

மாணவர்கள்,கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.

பரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.

மதிப்பெண்கள்: 87%

+ பணவரத்து திருப்திகரமாக இருக்கும்

- அலைச்சல் அதிகரிக்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close