[X] Close

இந்த வாரம் இப்படித்தான்! (துலாம் முதல் மீனம் வரை) பிப்ரவரி 7 முதல் 13ம் தேதி வரை


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 10:14 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே 

இந்த வாரம் எடுக்கும் காரியங்கள் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரலாம். தனஸ்தானத்தில் இருக்கும் குருவால் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல், தாமதம் ஏற்பட்டாலும் சீராக நடக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். 

குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவச் செலவு செய்ய வேண்டி இருக்கலாம். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். 

பெண்களுக்கு, மனதில் எதைப் பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். 

கலைத் துறையினருக்கு, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகள் வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். 

மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி திசைகள்: மேற்கு, வடமேற்கு நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 3, 4 

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்பக் கஷ்டங்கள் நீங்கும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

 இந்த வாரம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சின்னவிஷயங்கள் மனநிறைவைத் தரும். எதிர்பாலினத்தவரிடம் பழகும் போது கவனம் தேவை. 

தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவல்களில் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. 

குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். 

பெண்களுக்கு, அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். 

கலைத் துறையினருக்கு, ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்துடன் கருத்து வேற்றுமை நீங்கும். 

மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாகச் செய்வது நல்லது. 

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி திசைகள்: வடக்கு, வடகிழக்கு நிறங்கள்: சிவப்பு, வெள்ளை எண்கள்: 6, 9 

பரிகாரம்: சனிக்கிழமை முருகனுக்குத் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். 

 

தனுசு ராசி வாசகர்களே 

இந்த வாரம் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வதால் வீண் பிரச்சினை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்குக் கூட கோபம் வரலாம். கட்டுப்பாடு தேவை. திடீர் பணத்தேவை ஏற்படும்.

தொழில், வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் நிர்வாகம் குறித்து விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். 

குடும்பத்தினரால் திடீர் பிரச்சினைகள், வாக்குவாதம் உண்டாகும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு, கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நன்மை தரும். 

கலைத் துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். புத்திசாதுரியத்தால் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். 

மாணவர்களுக்கு, சக மாணவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன் திசைகள்: கிழக்கு, தெற்கு நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 1, 6 

பரிகாரம்: நாகதேவதையை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். 

 

மகர ராசி வாசகர்களே 

இந்த வாரம் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்துச் செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதார நிலை உயரும். 

தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். பணவரவு திருப்தி தரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். மேலதிகாரிகள் ஒத்துழைப்பு இருக்கும். 

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண்பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. 

பெண்களுக்கு, எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும்.

கலைத் துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டமாகும்.

மாணவர்களுக்கு, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. 

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன் திசைகள்: மேற்கு, தென்மேற்கு நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் எண்கள்: 5, 8 பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்கப் பிரச்சினைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும். 

 

கும்ப ராசி வாசகர்களே 

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சனி பார்வை பெறுவதாலும் - ராசியில் இருக்கும் புதனாலும் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம், பணவரவு இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

வழக்குகளில் சாதகமும் தொழில், வியாபாரத்தில் தொய்வும் நீங்கி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமாக இருக்கும். 

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம். வீடு, வாகனச் செலவுகள் உண்டாகலாம். உறவினர்களிடம் கவனம் தேவை. பெண்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். 

கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு வரவு நன்றாக இருக்கும். 

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், சனி திசைகள்: மேற்கு, தென்கிழக்கு நிறங்கள்: நீலம், மஞ்சள் எண்கள்: 4, 6 பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். 

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் மன நிம்மதி உண்டாகும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். 

தொழில், வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். வெளியூர் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். 

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. 

பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்துச் செயல்பட வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாகும். 

அரசியல்வாதிகளுக்குச் சாதகமான காலகட்டமாக இருந்தாலும் எதையும் ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். 

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன் திசைகள்: வடக்கு, தென்கிழக்கு நிறங்கள்: வெள்ளை, சிவப்பு எண்கள்: 1, 3 பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close