[X] Close

இந்தவாரம் இப்படித்தான்! (மேஷம் முதல் கன்னி வரை) பிப்ரவரி 7 முதல் 13ம் தேதி வரை


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 10:02 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே 

இந்த வாரம் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் இருக்கிறது. வீண்செலவு ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்களால் அலைச்சல், அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். 

தொழில், வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாகச் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். 

குடும்பத்தில் திருமணப் பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். 

பெண்களுக்கு, மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். கலைத் துறையினருக்கு, வீண் பயணம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருந்து வந்த தொய்வு நிலை நீங்கும். 

மாணவர்களுக்கு, கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் திசைகள்: கிழக்கு, தெற்கு நிறங்கள்: சிவப்பு, வெள்ளை எண்கள்: 1, 5, 9 பரிகாரம்: ஆதிபராசக்தி அன்னையைத் தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தைத் தரும்.

 

 ரிஷப ராசி வாசகர்களே 

இந்த வாரம் குரு பார்வையால் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை நீங்கும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுப் பின்னர் சரியாகும். 

அலுவல்களைச் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். 

பெண்களுக்கு, தேவையற்ற சில காரியங்களைச் செய்ய வேண்டி இருந்தாலும் நன்மை உண்டாகும். கலைத் துறையினருக்கு உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். 

அரசியல்வாதிகள் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி திசைகள்: மேற்கு, வடக்கு நிறங்கள்: வெள்ளை, சிவப்பு எண்கள்: 4, 6, 9 பரிகாரம்: தாயாரை வணங்கி வரத் துன்பங்கள் விலகும். 

 

மிதுன ராசி வாசகர்களே 

இந்த வாரம் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் மங்கள காரியங்களில் தடைகள் அகலும். பணவரவு சீராக இருக்கும். வேலைப் பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தவரிடம் சில்லறைச் சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். 

தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். வீட்டில் சுபகாரியம் நடக்கும். 

பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலைப்பளு அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். அரசியல்வாதிகள் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். 

மாணவர்களுக்கு, கிண்டல், கேலி பேச்சுகளைத் தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி திசைகள்: வடக்கு, மேற்கு நிறங்கள்: வெள்ளை, பச்சை எண்கள்: 2, 5, 7 பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். 

 

கடக ராசி வாசகர்களே 

இந்த வாரம் அனைத்துக் கிரகங்களும் சாதகமாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். முதலீடுகளில் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தைரியம் உண்டாகும். வீண்வாக்குவாதங்களால் பகையை வளர்க்க வேண்டாம். 

தொழில், வியாபாரத்தில் சாதுரியமான பேச்சினால் வியாபாரம் லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். குடும்பத்தினரின் செயல்பாடுகள் படபடப்பைத் தருவதாக இருக்கலாம். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். 

பெண்களுக்கு, மனதைரியம் உண்டாகும். கலைத் துறையினருக்கு, எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி திசைகள்: மேற்கு, வடக்கு நிறங்கள்: வெள்ளை, நீலம் எண்கள்: 2, 3, 9 பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க எல்லாத் தடைகளும் விலகும். 

 

சிம்ம ராசி வாசகர்களே 

இந்த வாரம் சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அடுத்தவர் சுமத்திய வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் அகலும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணத்தேவை ஏற்பட்டாலும் அதைத் திறமையாக சமாளித்து விடுவீர்கள். 

தொழில், வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் திறமை உண்டாகும். அலுவலகப் பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். 

பெண்களுக்கு, மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்கக் கவனமாகச் செயல்படுவது நல்லது. கலைத் துறையினருக்கு தொழிலில் இருந்த பிரச்சினைகள் அகலும். அரசியல்வாதிகள் திட்டமிட்ட எந்த பணிகளும் துரிதகதியில் நடைபெறும். 

மாணவர்களுக்கு, கல்வியில் மெத்தனப் போக்கை விடுத்துக் கவனமாகப் படிக்க வேண்டும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் திசைகள்: கிழக்கு, தெற்கு நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 1, 3, 8 பரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். 

 

கன்னி ராசி வாசகர்களே 

இந்த வாரம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனசஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் கூடவரும். அதிகம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. 

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பது முன்னேற்றத்திற்கு உதவும். உத்தியோகத்தில் துணிச்சலாக வேலைகளைச் செய்து வெற்றி பெறுவார்கள். 

குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வதால் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கியமான பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம்பக்கத்தவரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். 

பெண்களுக்கு, அதிகம் பேசுவதைத் தவிர்த்துச் செயலில் வேகம் காட்டுவது நல்லது. கலைத் துறையினருக்கு வாக்கு வன்மையால் தொழில் சிறப்பாக நடக்கும்.

 அரசியல்வாதிகளுக்கு, நிதானமாகப் பேசுவது நன்மை தரும். மகிழ்ச்சி உண்டாகும். 

மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி திசைகள்: தெற்கு, தென்கிழக்கு நிறங்கள்: பச்சை, வெள்ளை எண்கள்: 5, 8

 பரிகாரம்: நவகிரகத்தில் புதனுக்கு மருக்கொழுந்து மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வர எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close