[X] Close

ராகு- கேது பெயர்ச்சி: சித்திரை நட்சத்திரப் பலன்கள்


raghu-kedhu-chithirai

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 09:46 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சித்திரை:

கிரகநிலை:

ராகு பகவான் உங்கள் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்கள் எட்டாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

இனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடைய சித்திரை நட்சத்திர அன்பர்களே!

நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்.  இந்தப் பெயர்ச்சியில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசிப் பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும்.

பெண்கள் எதைப்பற்றியாவது நினைத்து கவலைப்படுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

கலைத்துறையினர், மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய்  தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் துறையினர், சிறிய வேலையைச் செய்து முடிக்கக்கூட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்கள், கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபாடு செய்வதும் - கந்த குரு கவசம் சொல்லி வழிபடுவதன் மூலமும் ஏற்றம் காண்பீர்கள்

மதிப்பெண்கள்: 82%

+ போட்டிகள் விலகும்

- மனதில் ஏதாவது குறை இருக்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close