[X] Close

ராகு- கேது பெயர்ச்சி: ஹஸ்தத்துக்கான பலன்கள்


raghu-kedhu-hastham

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 09:35 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ஹஸ்தம்:

கிரகநிலை:

ராகு பகவான் உங்கள் இருபத்தி இரண்டாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்கள் ஒன்பதாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சொந்த முயற்சியாலும், மனத்துணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் ஹஸ்தம் நட்சத்திர அன்பர்களே!

நீங்கள் தைரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்தப் பெயர்ச்சியில்  காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தைக் கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காண முற்படுவீர்கள். மனத்தடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில்  செல்லும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள்  பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே  திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம்.

குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். பெண்கள்,  சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனத்தடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.

கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்தக் காரியத்திலும் அவசரம் காட்டுவீர்கள். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது  நல்லது.

அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து, தீர்க்கமாக ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்.

மாணவர்களுக்கு  கல்விக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: ஆஞ்சநேய கவசம் படிப்பதும் - ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவதும் மிகுந்த வளங்களைக் கொடுக்கும்.

மதிப்பெண்கள்: 75%

+ நண்பர்கள் மூலம் நல்லது நடக்கும்.

- திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close