[X] Close

ராகு-கேது பெயர்ச்சி: புனர்பூசத்துக்கான பலன்கள்


raaghu-kedhu-punarpoosam

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 19:04 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

புனர்பூசம்:

கிரகநிலை:

ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்கள் பதினைந்தாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

திட்டங்களைத் தீட்டுவதில் கெட்டிக்காரரான புனர்பூச நட்சத்திர அன்பர்களே!

நீங்கள் எதை செயல்படுத்துவதிலும் வல்லவர். இந்தப் பெயர்ச்சியில் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய  பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பிச் செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்டநாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களின் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். 

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு வாகனத்தை ஓட்டும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வந்துசேரும்.  

அரசியல் துறையினருக்கு மனக்குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும்போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் பிடிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில்  வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகன் வழிபாடும் - கந்த சஷ்டி கவசம் பாராயணமும் திருப்புமுனை அளிக்கும்.

மதிப்பெண்கள்: 82%

+ பணவரத்து அதிகரிக்கும்

- எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close