[X] Close

வெள்ளிக்கிழமை ஏன் விசேஷம்? யாருக்கெல்லாம் ராஜயோகம்?


jodhidam-arivom-2-11

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 10:16 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 11: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

 நாம் இதுவரை பார்த்த யோகங்களை உங்கள் வாழ்க்கையோடும், உங்கள் ஜாதகத்தோடும் பொருத்திப் பார்த்திருப்பீர்கள். அதில் அதில் ஏதும் சந்தேகம் இருந்தால் கமெண்டில் கேள்வி கேளுங்கள். விளக்கம் அளிக்க காத்திருக்கிறேன்.

அப்படி வாசகி ஒருவர் கேட்ட கேள்வி....

ஆடி வெள்ளிக்கிழமை எவ்வளவு விசேஷமோ, அதேபோல தை மாத வெள்ளிக்கிழமைகளும் விசேமானது என்பது எப்படி என்று விளக்க முடியுமா?

இதுதான் வாசகியின் கேள்வி.

இவரது கேள்வியும் அதற்கான விளக்கமும் உங்களுக்கும் உதவும்.

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாள். மகாலட்சுமி செல்வத்துக்கான தேவி; சக்தி; அன்னை. எனவே எல்லா வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்ததுதான்!

ஆனாலும் ஆடி வெள்ளியும் தை வெள்ளியும் மேலும் சிறப்பு வாய்ந்தது.

நாம் நம் வீட்டில் காலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கேற்றி இறைவழிபாடு செய்வது வழக்கமானதுதான்.

நமக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பகல் பொழுது, மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணிவரை இரவுப் பொழுது.

இதுவே தேவர்களுக்கு 6 மாதம் பகல்,  6 மாதம் இரவு. இதை எப்படி வரையறுக்கிறார்கள்?

தை மாதம் என்னும் மகர மாதம் முதல் ஆனி மாதம் என்னும் மிதுன மாதம் வரை "உத்தராயனம்" என்னும் பகல் காலமாகும்.

ஆடி மாதம் என்னும் கடக மாதம் முதல், மார்கழி என்னும் தனுசு மாதம்வரை "தட்சிணாயனம்" என்னும் இரவுப் பொழுது காலம்.

இதில் தை மாதம் காலை வேளை. ஆடி மாதம் மாலைப் பொழுது  (தேவர்களின் கணக்குப்படி).

கிழமைகளில் மிக உன்னதமானது வெள்ளிக்கிழமை. ஆகவே ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளும், தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளும் மிக மிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே இந்த இரண்டு மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால், நம் வீட்டில் செல்வம் பெருகும்.

மார்கழி மாதம் என்பது பிரம்ம முகூர்த்த வேளை என்னும் அதிகாலை வேளை (தேவர்களுக்கு). அந்த நேரத்தில் தேவர்கள் நீராட பூமியில் இருக்கும் புண்ணிய நீர்நிலைகளுக்கு வருவதாக ஐதீகம். அந்த வேளையில் நாம் இறைவனின் நாமங்களை பாராயணம் செய்வதன் மூலம் தேவர்களின் அருளாசியை நாம் பரிபூரணமாகப் பெறலாம்!

ஆகவே, வெள்ளிக்கிழமையிலும் தை வெள்ளிக்கிழமையிலும் மறக்காமல் அம்பிகையை வணங்குங்கள். மகாலட்சுமியை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

சரி... இப்போது நாம் யோகங்கள் பற்றி பார்ப்போம்.

இப்போது நாம் பார்க்கப் போவது "நீச்ச பங்க ராஜயோகம்" 

ஒவ்வொரு கிரகத்திற்கும் " உச்சம்" என்னும் இரு மடங்கு பலம், மற்றும் "நீசம்" என்னும் முற்றிலும் பலமிழக்கும் செயல்கள் என இரண்டு அம்சங்களும் உண்டு.

உச்சம் அடைகின்ற கிரகம் அதற்கு நேரெதிர் வீடான ஏழாம் வீட்டில் நீசம் அடையும். கீழ்கண்ட படத்தைப் பாருங்கள்.

இதன் மூலம் நாம் அறிய வேண்டியது.

மனிதர்களுக்கு மட்டுமே ஏற்றம் இறக்கம் இருக்கிறது. இறை அம்சங்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. இப்படித்தானே நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் பிரபஞ்சத்தை இயக்குகின்ற கிரகங்களுக்கும் உச்சம், நீசம் என்னும் ஏற்றம் இறக்க நிலைகள் இருக்கத்தான் செய்கின்றன.

இது மட்டுமல்ல கிரக அஸ்தமனம் எனும் பலம் இழத்தல், வக்ரகதி என்னும் தன் இயல்பு குணத்திற்கு எதிரான நிலைப்பாட்டுக்கு மாறுதல், கிரக யுத்தம் என்னும் கிரகங்களுக்குள் ஏற்படும் போரில் தோற்றுப் போய் தன்சக்தியை இழத்தல் என நிகழ்கின்றன.

 நன்மை செய்யலாம் என நினைத்து உச்சம் என்னும் இரு மடங்கு பலம் பெறும் போது வக்ரகதி அடைந்து "உச்சவக்ரம்" என்னும் நீச்ச அந்தஸ்தைப் பெற்று முற்றிலும் பலமிழந்து போவது நடக்கும்.

அடுத்து நேரடியாகவே " நீசம்" என்ற நிலை பெற்று பலமிழத்தல்.

நாம் இப்போது இந்த நிலையைப் பற்றி மட்டுமே பார்க்கப் போகிறோம்.

மேலே உள்ள படத்தில் நீசம் என்ற கட்டத்தைப் பார்த்தீர்கள் அல்லவா, உங்கள் ஜாதகத்தில் அந்தப் படத்தில் உள்ளவாறு அதே அமைப்பில் கிரகம் ஏதாவது இருந்தால் அந்த கிரகம் நீசமடைந்திருக்கிறது என்பதை

 அறிந்து கொள்ளலாம்.

இப்போது உங்கள் கேள்வி...  இப்படி பலமிழந்த கிரகம் எனக்கு ஏதாவது நன்மை செய்யுமா? என்பதுதானே!

நீசமடைந்த கிரகம் உண்மையில் பெரிய நன்மை ஏதும் செய்யாது.  ஆனால், "நீச பங்கம்" அடைந்தால் பெரும் நன்மைகளைச் செய்யும்.

சரி... நீசபங்கமானால் ஏன் நன்மை செய்ய வேண்டும்? 

நீசமான கிரகம் பங்கம் என்னும் மற்றொரு பாதிப்பை அடையும் போது அதன் நீசத்தன்மை நீங்கி மிகப்பெரும் பலமான " உச்சம்" என்னும் நிலையை அடைகிறது. எனவே அது பெரும் நன்மைகளை வாரி வழங்குகிறது. 

ஆனால் நீசமான கிரகம், நீசம்பங்கமாகி விட்டதா என்பதை எவ்வாறு அறிவது?

அதற்கு 9 வழிமுறைகள் உள்ளன.

அதை விவரித்தால் ஜோதிட பாடம் எடுப்பது போல ஆகிவிடும். 9 விதிமுறைகள் இருக்கிறதல்லவா. ஆகவே, நிச்சயம் ஏதாவதொரு விதியின் கீழ் நீச கிரகம் நீசத்தன்மை விடுத்து நீசபங்கம் ஆகிவிடும்.

ஆகையால் அது எப்படி பலன் தரும், எப்போது பலன் தரும்,  என்னென்ன பலன் தரும் என்பதையெல்லாம் பார்ப்போம்.

ஒரு உதாரணம்...

அவர் எனக்கு நண்பர். ஒருகாலத்தில் மாற்று வேட்டி கூட இல்லை அவருக்கு! ஆனால் அவர் இன்று பென்ஸ் காரில் வலம் வருகிறார். காரணம், நீசபங்கராஜ யோகத்தின் மகிமை.

ஆமாம்... நீசபங்க ராஜயோகம் என்பது முழுக்க முழுக்க ராஜயோகம் தந்தருளும் அற்புதச் சூழல்தான்!

- தெளிவோம்


வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close