[X] Close

இந்த வாரம் இப்படித்தான்! (ஜன 17 முதல் 23ம் தேதி வரை) துலாம் முதல் மீனம் வரை


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 17 Jan, 2019 09:25 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரலாம். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல், தாமதம் ஏற்பட்டாலும் பலன் சீராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். கடின உழைப்பினால் வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.  கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சுணங்கிக் கிடந்த காரியங்கள் நல்லமுறையில் நடைபெறும். அரசியல்வாதிகள் எதையும் ஆரம்பிக்கும் போது ஆலோசித்துச் செய்ய வேண்டும். அரசு சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு எதிலும் வெற்றிபெறும் சூழல் நிலவும். சிக்கன நடவடிக்கைகள் கை கொடுக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: குலதெய்வத்தை நினைத்து வழிபடுங்கள். வீட்டில் விளக்கேற்றுங்கள்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். தந்தை உங்களுக்கு உதவியாக இருப்பார். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த சுணக்க நிலை மாறும். தானதர்மம் செய்யவும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்டதூரப் பயணங்கள்  செல்ல நேரலாம். தொழில், வியாபாரத்தில் நிதானப் போக்கு காணப்படும். வியாபாரத்தில் போட்டிகள்  இருந்தாலும் அதிகளவில் பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உண்டாகலாம்.

குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு மனக்கவலை நீங்கும். கலைத் துறைனருக்குத் தேவையான பணம் தாராளமாகக் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் வெற்றி கிடைக்கலாம். தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் சாதகமான சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு, தடைகளை தாண்டி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: இளஞ் சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: முருகனை வழிபடத் துன்பங்கள் நீங்கி முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் அலைச்சலின்றி வேலைகளைச் செய்வீர்கள். மனநிம்மதி இருக்கும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனப் போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில்  சிக்கல்கள், தடைகள் நீங்கும். வாடிக்கையாளர்களுக்கும் உங்களுக்குமான தொடர்பு நல்ல முறையில் இருக்கும். உத்தியோகத்தில் வேலை குறித்த கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாகப் பேசவும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபச்செலவு ஏற்படும். கணவன் மனைவிக்குள் சிறு பூசல்கள் வரலாம்.

பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு தேவையற்ற சிக்கலகள் உருவாகலாம். காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். கலைத் துறையினருக்குத் தேவையான லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் பற்றி உடனிருப்பவர்களுடன் ஆலோசனை செய்தபின் முடிவெடுக்கவும். அரசியல்வாதிகள் தங்களுக்குண்டான தனித்திறமையுடன் செயலாற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், சனி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: குருபகவானுக்குக் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபட எல்லாவிதத் துன்பங்களும் பறந்தோடும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். பணவரவு நல்லபடியாக இருக்கும். வேலைப்பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்வது ஒற்றுமைக்கு வழிவகுக்கும். தொழில்,  வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

விட்டுக் கொடுத்துப் போவதால் நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் நன்மைகள் நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான வழிகள் தெரியும். மாணவர்களுக்கு அடுத்தவர் பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலியைத் தவிர்க்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 7, 9

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்பக் கஷ்டங்கள் நீங்கும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் சுணக்க நிலை மாறிக் காரியங்கள் நல்லபடியாக நடந்தேறும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். உங்களை எதிர்த்துச் செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருளாதார நிலை மேம்படும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சினைகளை உண்டாக்கியவர்கள் அமைதியாவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமணக் காரியங்களில் சாதகமான போக்க காணப்படும்.

பெண்களுக்கு சின்ன வேலைக்கும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு, கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. மாணவர்களுக்கு சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. கல்வி ரீதியான நிதியுதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 3, 9

பரிகாரம்:  வியாழக்கிழமை ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் தேவையற்ற மன சஞ்சலம் நீங்கும். பிறரிடம் அனுசரித்துச் செல்வதால் வீண் பிரச்சினை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்குக் கூட கோபம் வரலாம். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நன்மை தரும். பணத்தேவை பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது.

பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் பதற்றம் தருவதாக இருக்கலாம். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வதும் அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பதும் நல்லது. பெண்களுக்கு, வீண் செலவைத் தடுக்கத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். அரசியல்வாதிகளுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு, சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு

எண்கள்: 1, 3

பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதியை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close