[X] Close

இந்த வாரம் இப்படித்தான்! (ஜன 17 முதல் 23ம் தேதி வரை) மேஷம் முதல் கன்னி வரை


indha-vaaram-ippadithan

  • kamadenu
  • Posted: 17 Jan, 2019 09:18 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் காரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். நிலம், வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். குடும்பத்தில் சுபச்செலவு உண்டாகலாம். மனத்தில் குழப்பம் ஏற்பட்டுத் தெளிவான மனநிலைக்கு வருவதற்கு முயற்சி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் நீங்கும். பணவரவு தடைபட்டு வந்துசேரும். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகப் பொறுப்புகள் அதிகரிக்கும்.

இயந்திரங்களில் பணிபுரிபவர்கள், ஆயுதங்களைக் கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். குடும்பத்தினரிடம் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாகப் பழகுவது நல்லது. பெண்களுக்கு கருத்து வேற்றுமை நீங்கும். கலைத் துறையினருக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் செல்வாக்கும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பொருளுதவி, மரியாதை கிடைக்கும். மாணவர்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: இளஞ்சிவப்பு , மஞ்சள்

எண்கள்: 6, 7, 9

பரிகாரம்: சிவபெருமானை பூஜை செய்து வழிபடுங்கள்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் நீங்கள் எந்தப் பிரச்சினையையும் கண்டு பயப்படமாட்டீர்கள். கோபம், பதற்றம் குறையும். எடுத்த காரியத்தைச் செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும். துணிச்சலான காரியங்களால் பலன் உண்டு. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் ஊழியர்களால் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பரபரப்பு நீங்கி அமைதியாகப் பணிகளைக் கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில்  பிரச்சினைகள் தீரும்.

கணவன் மனைவிக்குள் சங்கடங்கள் நீங்கி, பிள்ளைகள் முன்னேற்றம் குறித்து ஆலோசிப்பீர்கள். இல்லறம் இனிக்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை முடித்துவிடும் ஆற்றல் உண்டாகும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள் துணிவான முடிவுகளை எடுப்பீர்கள். வேலைப்பளுவும், குழப்பமும் ஏற்படலாம். மாணவர்களுக்கு எதிர்கால முன்னேற்றத்துக்குத் தேவையான விஷயங்கள் நடப்பதற்கு ஏதுவாக அனைத்தும் நடைபெறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 1, 6

பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலை சாற்றி வழிபடுங்கள்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்களுக்குத் தேவையான பண உதவி கிடைக்கும். எடுத்த காரியம் உடனடியாக முடியவில்லையே என்ற படபடப்பு இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். குடும்பத்துக்காக அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். வீண் பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். குடும்பத்தில் உள்ள திடீர் பிரச்சினைகள் தலைதூக்கலாம்.

பிள்ளைகளின் செயல்களால் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் பொருட்களை கவனமாகப் பாதுகாக்க வேண்டும். பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கலைத் துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற பதற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை

எண்கள்: 1, 5

பரிகாரம்: ரங்கமன்னாரை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடிப்பீர்கள். குறைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். பணத்தேவைக்குத் தகுந்தாற்போல வருமானம் வரும். தொழில், வியாபாரத்தில் அமோகமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவச் செலவு செய்ய வேண்டி இருக்கலாம்.

கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பிள்ளைகளை அவரவர் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும். பெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப் போக்கு குறைந்து நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: ஆதிபராசக்தி அன்னையைத் தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தை தரும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் செலவு ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்களால் அலைச்சல், அதிருப்தி உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் பணத்தேவை ஏற்பட்டு பின்பு சரியாகும். கடன் விவகாரங்களில் கவனமாகச் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். வீடு, வாகனச் செலவுகள் உண்டாகலாம்.  பிள்ளைகளுக்காகக் கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். உறவினர்களிடம் கவனம் தேவை. பெண்கள் மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். கலைத் துறையினர் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ், பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடாமல் இருப்பது உத்தமம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், சனி

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 5

பரிகாரம்: நரசிம்மரை வணங்கி பூஜை செய்யுங்கள். நன்மைகள் அதிக அளவில் நடைபெறும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

பிள்ளைகளால் பெருமை ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினர் நல்ல புகழை அடைவீர்கள். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, பாடுபட வேண்டியிருந்தாலும் தொண்டர்களால் நன்மை இருக்கும். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை நீங்கிப் புதிய தெம்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், சனி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை

எண்கள்: 1, 5

பரிகாரம்:  நவக்கிரங்களை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close