[X] Close

தை முதல் வியாழன்; குருவை வணங்குவோம்!  


thai-guru-vaaram

திட்டை ராஜகுரு

  • வி.ராம்ஜி
  • Posted: 16 Jan, 2019 20:43 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

தை மாதத்தின் முதல் வியாழக்கிழமையில் குரு பகவானை வணங்குங்கள். சகல வளமும் ஞானமும் யோகமும் பெற்று இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தை மாதம் பிறந்துவிட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த தை மாதத்தின் முதல் வியாழக்கிழமை நாளைய தினம் (17.1.19). வியாழக்கிழமையை குருவாரம் என்று சொல்லுவோம்.

எனவே குருவாரத்தில் குரு பகவானைத் தரிசிப்பதும் பிரார்த்தனை செய்வதும் விசேஷம். நவக்கிரகத்தில் உள்ள குரு, பிரகஸ்பதி என்று அழைக்கப்படுவார். தேவ குரு என்பவர், இந்த நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான்.

குரு வார வியாழக்கிழமையில், அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தில் உள்ள குருவை மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வது மிகுந்த பலன்களைத் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அதேபோல், சிவன் கோயில்களில், சிவ கோஷ்டத்தில் பிராகார வலம் வரும் போது, தென் திசை பார்த்தபடி தட்சிணாமூர்த்தி சந்நிதி அமைந்திருக்கும். தட்சிணாமூர்த்தி என்பது, சிவ அம்சம். சிவ வடிவங்களில் ஒன்று. சிவபெருமான், குருவாகவே வந்து, கல்லால மரத்தடியில் அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை வழங்கியதாகச் சொல்கிறது புராணம்.

எனவே குருவாரத்தில், குரு தட்சிணாமூர்த்தியை தரிசித்துப் பிரார்த்திப்பது மனதில் தெளிவைத் தரும். எடுத்த காரியத்தில் வெற்றியைக் கொடுக்கும். சகலவிதமான சம்பத்துகளும் கிடைத்து இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.

நவக்கிரகத்தில் உள்ள குரு, குரு தட்சிணாமூர்த்தி, குரு அம்சமாக வீற்றிருக்கும் ஞானகுருவான முருகக் கடவுள், குரு பிரம்மா குடிகொண்டு கோலோச்சும் ஆலயங்கள் என அற்புதமான தை மாதத்தின் முதல் வியாழனில், குருவை வணங்குவோம். குருவருள் பெறுவோம்.

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close