[X] Close

லட்டு, தயிர்சாதம், நீர்மோர் கொடுத்தால் உங்களுக்கு குரு சந்திர யோகம் நிச்சயம்!


jodhidam-arivom-5

  • kamadenu
  • Posted: 16 Jan, 2019 09:26 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் (2) - 5: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வாசகர்களுக்கு வணக்கம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

குரு சந்திர யோகத்தில் ஆலயமும் ஆன்மிகமும் தொடர்பு உடையது என்று சொன்னேன் அல்லவா.

எப்படியெல்லாம் தொடர்பு கொண்டிருக்கிறது என்று பார்ப்போமா?

கூடுதலாக குருமங்கள யோககாரர்களும் இதற்கு பொருத்தமானவர்கள்தான்.

இந்த யோக பலம் உள்ளவர்கள் தொடர்ச்சியாக ஒரு ஆலயத்திற்கு சென்று வர, அந்த ஆலயம் தன்னாலே புகழ் பெற ஆரம்பிக்கும். 

அதிலும் குறிப்பாக மகான்கள், சித்தர்கள் இவர்களால் உருவாக்கப்பட்ட ஆலயங்கள், இந்த யோககாரர்களால்தான் வெளி உலகத்திற்குத் தெரிய வரும்.

இன்றைக்கு பிரபலமாக உள்ள ஆலயங்கள் எல்லாம் ஒரு காலத்தில் புதர்களால் மூடப்பட்டும், மண்ணுக்கு அடியில் மறைந்தும், புற்றுக்களால் மறைக்கப்பட்டும் இருந்தவை என்பதை அறிவீர்களா?

இவை அனைத்தும் யாரோ ஒருவரால் அடையாளம் காணப்பட்டு பிற்காலத்தில் உலகறியச் செய்யப்பட்டது. 

இப்படி அடையாளம் காட்டப்பட்டவர்கள், குருசந்திர யோகமும் குரு மங்கள யோகமும் உடையவர்களே.

இது மட்டுமல்ல... இந்த யோகம் உடையவர்கள் எதைத் தொடங்கி வைத்தாலும் அது அபார வளர்ச்சியை அடையும்.

கடை துவக்கி வைப்பதாகட்டும் அல்லது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து வைப்பதாகட்டும் குறைந்த பட்சம் ஒருவருக்கு தன் கையால் ஒரு சிறு தொகை தந்தால் கூட அதை வைத்தே அந்த நபர் ஒரு பெரிய தொழிலதிபர் ஆகிவிடுவார். அவ்வளவு ராசியானவர்கள் இந்த யோககாரகர்கள்.

ஒரு கூடுதல் தகவல்...

 கடக ராசி பூசம் நட்சத்திரக் காரகர்கள், விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரக்காரர்கள்; மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள்.

இவர்கள் துவக்கி வைக்கும் எந்த ஒரு நல்ல காரியமும் வி ரு ட் ச ம் போல் விரிவடையும்.

இவர்களெல்லாம் தான் வளர்ந்து பெரியாளாக வேண்டும் என நினைப்பதை விட , அடுத்தவர்களை வளர்த்து ஆளாக்கி அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள். அதனால் இவர்கள்

 ஏமாளி என்ற பட்டம் பெறுவார்கள் என்பது வேறு விஷயம்.

ஆனாலும் கொடுத்து வாழவைக்கும் குணம் இந்த நட்சத்திரக்காரர்களை, இந்த யோககாரர்களை எந்தக் காலத்திலும் தாழ்த்தி விடாது. எனவே இவர்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். நீங்கள் நீங்களாகவே இருங்கள். அதுதான் உங்களுக்கு அழகு.

அடுத்து... குரு சந்திர யோககாரர்கள் அவசியம் செய்யவேண்டியதைப் பார்ப்போம்.

நீங்கள் தொடர்ச்சியாக ஆலயங்களுக்குச் சென்று வருவதன் மூலம் உங்கள் வாழ்க்கை தரம் உயரும். முக்கியமாக, நீங்கள் எந்தக் கோயிலுக்குச் செல்கிறீர்களோ அந்த ஆலயம் மிகவும் பிரசித்தி அடையும்.

இந்த யோகத்தை மேலும் பலமாக்க, உங்கள் வாழ்க்கையை இன்னும் வளமாக்க இந்த பரிகாரங்களையும் செய்யுங்கள்.

சர்க்கைரைப் பொங்கல் செய்து ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து தானமாக விநியோகம் செய்யுங்கள்.

லட்டு பிரசாதம் குழந்தைகளுக்குத் தாருங்கள்.

 

தயிர் சாதம், நீர் மோர், தண்ணீர் பந்தல் அமைப்பது, இந்த தானங்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையில், எதிரிகள், போட்டிகள் இல்லாத நிலை என்பதையெல்லாம் உண்டாக்கும். உங்களை அடுத்தக்கட்டத்துக்கு உயர்த்திவிடும். மனதில் நம்பிக்கையை வளர்க்கும். உத்தியோகம், செல்வம், அறிவு, கெளரவம் என சகலத்திலும் வளர்ச்சியை உண்டாக்கும். 

மேலும் குருவின் ஆலயங்களான ஆலங்குடி, திட்டை, திருச்செந்தூர் ஆலயங்களுக்கு முடிந்தபோதெல்லாம் சென்று தரிசித்து வாருங்கள். வியாழக்கிழமை தோறும், தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யுங்கள்.

சந்திரன் ஸ்தலமான திருப்பதி, தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திங்களுர், மற்றும் சாந்தசொரூபமான  நிலையில் அம்மன் குடிகொண்டிருக்கும் ஆலயங்கள் அதாவது சக்தி வடிவான அம்பாள் ஆலயங்களுக்குச் சென்று தரிசியுங்கள்.

இப்படித் தொடர்ந்து தரிசித்து வருவதால், உங்களுக்கு குரு சந்திரயோகம் இன்னும் இன்னும் பலமாகும். வளம் கொடுக்கும்!

மேலும் குரு காயத்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சௌந்தர்ய லஹரி, ப வ மான சுக்தம் பாராயணம் செய்து வாருங்கள். அல்லது காரில் பயணம் செய்வது முதலான தருணங்களில், வீட்டில் இருக்கும் வேளையில் அதை ஒலிக்கவிட்டு, காதாரக் கேட்டு வாருங்கள். உள்ளத்திலும் இல்லத்திலும் நல்ல அதிர்வுகள் உண்டாகி, சகல செளபாக்கியங்களுடன் வாழவைக்கும்!

இதையடுத்து ஜாதகத்தில் உள்ள முக்கியமான யோகம் கஜகேசரி யோகம். அதைப் பார்ப்போமா?

கஜ என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம்.

மலை போன்ற யானையை சிங்கம் எந்த பதட்டமும் பயமும் இல்லாமல் எப்படி வீழ்த்துகிறதோ அந்த மன தைரியத்தையும் பதட்டமில்லாத நிலையையும் தரவல்லது இந்த கஜகேசரி யோகம். 

கஜகேசரி யோகம் யாருக்கெல்லாம் இருக்கிறது. அப்படி இருந்தால் என்னென்ன பலன்களையெல்லாம் வழங்கும், அந்தப் பலனைப் பெறுவதற்கு எந்த வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் விரிவாகவே பார்ப்போம்.

- தெளிவோம்

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close