[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 09:24 am
  • அ+ அ-

மேஷம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதரர் வகையில் எதிர்பாராமல் மனத்தாங்கல் வரும்.

ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய கடனைப் பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது. கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: மூத்த சகோதரர் வகையில் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு தாயாரின் ஆதரவு உண்டு. சொத்துச் சிக்கல்களில் ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். பணவரவு உண்டு.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: பிள்ளைகள் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள்.

மகரம்: வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முக்கியத் தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு.

கும்பம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.

மீனம்: முக்கிய கோப்புகளைக் கையாளும்போது கவனமுடன் செயல்படுங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படக் கூடும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close