[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 11 Jan, 2019 09:16 am
  • அ+ அ-

மேஷம்: குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ரிஷபம்: அதிரடித் திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: பிரபலங்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும்.

கடகம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். முக்கிய கோப்புகளைக் கவனமாக கையாளுங்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.

சிம்மம்: சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். 

கன்னி: பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். 

துலாம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். 

விருச்சிகம்: புதிய எண்ணங்கள் தோன்றும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் கருத்தொற்றுமை ஏற்படும். 

தனுசு: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து வந்த பணத்தால் சமாளிப்பீர்கள். பேச்சுத் திறமையால் சில காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் ஏற்படும். பணவரவு சரளமாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடிப்பீர்கள். சிலவற்றுக்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவுகள் வேண்டாம்.

மீனம்: எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்ப்பீர்கள். உறவினர்களால் செலவினம் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close