[X] Close

இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் – ஜனவரி 10 முதல் 16ம் தேதி வரை (துலாம் முதல் மீனம் வரை)


indha-vaaram-ungalukku-ippadithan

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 05:44 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி உண்டாகும். சிக்கன நடவடிக்கைகள் கை கொடுக்கும். உயர்வான சிந்தனை மேலோங்கும். எந்தக் காரியத்தையும் கச்சிதமாக முடிக்கும் திறன் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும்.வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சினை நீங்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும்.

உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள்  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள் தீரும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர்களால்  பாராட்டும், வெகுமதியும் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை,மஞ்சள்

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பம் சார்ந்த விஷயங்கள் பேசும்போது கவனமாகத் திட்டமிட்டுப் பேசவும். சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அகலும்.பேச்சுத்திறனால் காரிய வெற்றிகள் உண்டாகும். மற்றவர்களால் நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படும்.மூன்றாம் மனிதர்கள் மூலம் நடைபெற வேண்டிய காரியங்கள் சுபமாகும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கி விருத்தியடையும்.

பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. தடைபட்ட நிதியுதவி கிடைக்கும்.  வராமல் நின்றுபோன வர்த்தக ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் வேலைபளு, வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதையும் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை,மஞ்சள்

எண்கள்: 3, 9

பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள அங்காரகனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். கொடுத்த பணம் திரும்ப வருவதற்குத் தாமதமாகலாம்.வீண் எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும்.குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஊழியர்களால் நன்மை உண்டாகும். எதிலும் துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு, காரியங்களைத் துணிச்சலாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு கவுரவம் உயரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிடைக்கும். எதிரிகள் வகையில் சற்றுக் கவனத்துடன் செயல்படவும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு,மஞ்சள்

எண்கள்: 3, 6, 7

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமை தோறும் வெற்றிலை மாலை சாற்றி பன்னிரெண்டு முறை வலம் வரவும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் சண்டைகள், வீண் குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது.வாகனத்தால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாகக் காணப்படுவார்கள். எதையும் யோசித்துச் செய்வது நன்மை தரும். கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசிச் செயல்பட வேண்டும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். குடும்பத்தில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

துணிச்சலாக எதிலும் செயலாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்களுக்கு, கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத் துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். மாணவர்களுக்கு, மிகவும் கவனமாகப் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், சனி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம், கரும்பச்சை

எண்கள்: 5, 7

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு 21 முறை வலம் வரவும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் மனக்கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்துசேரும்.உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பத்தைச் சந்திக்கப் போகிறீர்கள். அறிவுத்திறன் கூடும். இனிமையான பேச்சால் எதிலும் வெற்றி காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான சங்கடங்கள் தீரும். வெளியூர்த் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் இல்லாவிட்டாலும் வருமானத்துக்குக் குறைவு இருக்காது.

உத்தியோகத்தில் உங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நிறைவேறும். கலைத் துறையினருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேற்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, கிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 2, 6

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் காகத்துக்கு அன்னம் வைத்து வழிபடவும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தேவையான அனைத்தும் கிடைக்கும்.கேளிக்கை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலை விசயமாக இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தில் தாமதமென்ற கவலை வேண்டாம். நேரத்துக்கு உணவருந்த முடியாமல் போகலாம். இரவில் பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் மனவருத்தம் நீங்கும்.விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நற்பலன்கள் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் நன்மைகள் அதிக அளவில் நடைபெறுவதற்கு வாய்ப்புண்டு.  செலவுகள் கூடும். பெண்களுக்கு, தீடீரென வருத்தம் ஏற்பட்டு நீங்கும். கொடுத்த வேலையைச் செய்து முடிக்க காலதாமதமாகலாம். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய காலகட்டமிது. அரசியல்வாதிகள் கூடுதலாக எந்த ஒரு வேலையையும் செய்து முடிக்கச் சிரமப்பட வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு, தேவையான உதவிகள் பெற்றோர்களிடமிருந்தும், ஆசிரியர்களிடமிருந்தும் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை,மஞ்சள்

எண்கள்: 1, 3, 7

பரிகாரம்: நாராயண மந்திரத்தை மனதாரச் சொல்லி வழிபடுங்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close