[X] Close

ஞானமும் யோகமும் தரும் குருவார பிரதோஷ தரிசனம்!


guru-vaara-pradhosham

  • வி.ராம்ஜி
  • Posted: 29 Mar, 2018 10:03 am
  • அ+ அ-

குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில், பிரதோஷம் வந்துள்ளது. எனவே இந்தநாளில் (29.3.18) சிவாலயம் சென்று வணங்குவோம். ஞானமும் யோகமும் கிடைக்கப்பெறலாம் என்பது உறுதி.

வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். வியாழக்கிழமை என்பது குருமார்களுக்கு, மகான்களுக்கு, ஞானிகளுக்கு உகந்த நாள். நவக்கிரகங்களில் முக்கியமான கிரகம் குருபகவான். எனவே வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குவதும் வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தரும்.

அதேபோல், தட்சிணாமூர்த்தி என்பது சிவனாரின் திருவடிவம், சனகாதி முனிவர்களுக்கு, சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக இருந்து, கல்லால மரத்தடியில் அமர்ந்து ஞானோபதேசம் செய்து அருளினார் என்கிறது புராணம்.

அதனால்தான் வியாழக்கிழமைகளில், குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து தரிசித்து வேண்டுகின்றனர் பக்தர்கள்.

அதேபோல், பிரம்மாவும் குரு அம்சம். ஞானகுருவாகத் திகழும் பிரம்மாவை வியாழக்கிழமைகளில் வணங்குவது, நம் தலையெழுத்தையே மாற்றவல்லது. குறிப்பாக,. திருச்சி திருப்பட்டூரில் குடிகொண்டிருக்கும் பிரம்மாவை வணங்கினால், நம் தலையெழுத்தையே திருத்தி அருள்வார் பிரம்மா என்கிறது ஸ்தல புராணம்.

மேலும் தற்போது திருப்பட்டூர் பிரம்மா கோயிலில், பிரம்மோத்ஸவ விழா விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தவேளையில், பிரம்ம தரிசனம், நமக்கு இன்னும் இன்னுமான பலன்களை வாரிவழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதுமட்டுமா?

பிரதோஷ நாளில், சிவாலயம் செல்வதும் சிவதரிசனம் செய்வதும் பாவங்களைப் போக்கி புண்ணியங்களைத் தந்தருளும் என்கின்றன புராணங்கள். பங்குனிப் பிரதோஷம் கூடுதலான விசேஷம். \

இன்று 29.3.18 வியாழக்கிழமை, பிரதோஷம். இந்த நன்னாளில், குருவாரப் பிரதோஷம் எனும் அற்புத நாளில், மாலையில் சிவாலயம் செல்லுங்கள். முடிந்த அளவுக்கு செவ்வரளியும் வில்வமும் வழங்குங்கள். முடியாதவர்களுக்கு தயிர்சாதமோ எலுமிச்சை சாதமோ வழங்குங்கள்.

நேற்று எப்படியோ... இன்று எப்படியோ... இனி அடுத்தடுத்த காலங்களில், அமோகமாக இருப்பீர்கள். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெற்று, சகல செல்வங்களும் பெற்று இனிதே வாழ்வீர்கள் என்பது உறுதி!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close