[X] Close

பங்குனியில் சமயபுரத்தாள் தரிசனம்! ஒரு புடவை வாங்கிக் கொடுங்களேன்!


samayapuram-mariamman

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Mar, 2018 10:43 am
  • அ+ அ-

தமிழகம் முழுவதும்  இருந்து, ஏதோவொரு ஊரில் இருந்துகொண்டு,  இந்த உலகில் எங்கோ இருந்துகொண்டு, ‘அம்மா தாயே சமயபுரத்தாளே... நீதான் எங்களைக் காப்பாத்தணும்’ என்று சொன்னாலே போதும்... நம் வீடு தேடி வந்து, நமக்கு நல்லது அனைத்தையும் செய்யும் அன்னை அவள்.

  அகிலத்து மக்கள் அனைவருக்கும் தாயெனத் திகழ்பவள் சமயபுரம் மாரியம்மன். தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பவள் என்கிறார்கள் பக்தர்கள். உடல் நோயுடன் உள்ளத்து நோயையும் தீர்த்து வைக்கும் மருத்துவச்சி. படித்தவர்-படிக்காதவர், ஜாதி மதம், பணக்காரர் -ஏழை என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் அருளும் பரோபகாரி என்று சமயபுரம் மாரியம்மனைக் கொண்டாடுகின்றனர்.  

    நம் சங்கடங்களைத் தீர்க்கும் சமயபுரத்தாளின் கோயிலில் பங்குனி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் உற்ஸவம் ஆரம்பமாகும். பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஒப்பற்ற விழாவின் எட்டாவது நாளன்று அம்பிகையை, இளநீரில் ஆவாஹனம் செய்து, ஊர்மக்கள் தங்களது வீடுகளில் வழிபாடு செய்வார்கள்.

  மங்கலம் பொங்கும் பங்குனி மாதத்தில், ஏதேனும் ஒருநாளில், திருச்சி சமயபுரத்தாளை கண்ணாரத் தரிசித்து, மனதார வழிபடுங்கள். முடிந்தால், அவள் மனம் குளிரும்படி, அவளுக்குப் பிடித்த அரக்குக் கலரிலோ, பச்சை நிறத்திலோ புடவை வாங்கி சார்த்துங்கள். சகல வளங்களும் தந்தருள்வாள் சமயபுரத்தாள்.  இன்னல்கள் தீர்த்து நிம்மதியுடன் வாழச் செய்வாள் சமயபுரம் மாரி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close