[X] Close

வார ராசிபலன் டிசம்பர் 6 முதல் 12ம் தேதி வரை: துலாம் முதல் மீனம் வரை


vaara-rasi-palan

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 10:01 am
  • அ+ அ-

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை மேலோங்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். வேலையில் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்துக்காகச் சில பணிகளை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு, கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள் தீரும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம். கலைத் துறையினர், அதிகமான வாய்ப்புகளையே பெறுவீர்கள். புகழைத் தக்கவைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி l திசைகள்: மேற்கு, தென்மேற்கு l நிறங்கள்: வெள்ளை, சிவப்பு l எண்கள்: 2, 5, 6 l பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருக்கிறார். அடுத்தவர் பேச்சைக் கேட்பதைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களுடன் வேறுபாடு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பெண்களுக்கு, மனநிறைவு கிடைக்கும் வாரம் இது. அரசியல்வாதிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து ஈடுபட வேண்டும். கலைத் துறையினருக்கு, நிதியுதவி போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன் l திசைகள்: வடக்கு, வடகிழக்கு l நிறங்கள்: வெள்ளை, சிவப்பு l எண்கள்: 2, 4, 9 l பரிகாரம்: முருகனுக்குப் பரிகார பூஜை செய்வது நிம்மதியைத் தரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மைகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். கிரகச் சேர்க்கைகள் வெற்றியையும் சந்தோஷத்தையும் தரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஊழியர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். பெண்களுக்கு, காரியங்களைத் துணிச்சலாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு, கவுரவம் உயரும். அரசியல்வாதிகளுக்கு, தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெறத் துணிச்சலாக முயல்வீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் l திசைகள்: கிழக்கு, வடகிழக்கு l நிறங்கள்: மஞ்சள், வெள்ளை l எண்கள்: 1, 3, 5 l பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எதையும் யோசித்துச் செய்வது நன்மை தரும். கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசிச் செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்துகொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத் துறையினருக்கு, நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். மாணவர்களுக்கு, திட்டமிட்டுப் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி l திசைகள்: தெற்கு, வடகிழக்கு l நிறங்கள்: வெள்ளை, நீலம் l எண்கள்: 2, 5, 6 l பரிகாரம்: விநாயகப் பெருமானைத் தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லாத் துன்பங்களும் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த அருமையான நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அறிவுத்திறன் கூடும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதால் நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சால் எதிலும் வெற்றி காண்பீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் குறையும். வெளியூர் தகவல்கள் நிறைவு தரும். உத்தியோகத்தில் தன் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு, அறிவுபூர்வமாகச் செயல்பட்டு நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளின் வாழ்க்கைத்தரம் உயரும். மாணவர்களுக்கு, எதிர்காலம் குறித்த எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன் l திசைகள்: மேற்கு, வடமேற்கு l நிறங்கள்: நீலம், பச்சை, வெள்ளை l எண்கள்: 6, 9 l பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும். ராசிநாதன் குருவின் பார்வையால் அனைத்துவிதமான நலன்களையும் பெறலாம். சுப நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சமிருக்காது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் அதிக லாபம் தரும். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு, பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத் துறையினருக்கு உகந்த காலகட்டமிது. அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு, பொறுப்புகள் அதிகரிக்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி l திசைகள்: வடக்கு, வடகிழக்கு l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் l எண்கள்: 1, 3, 9 l பரிகாரம்: தினம்தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிக்குச் சென்று வலம் வரவேண்டும்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close