[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 09:15 am
  • அ+ அ-

மேஷம்: அலைச்சலும், செலவுகளும் தொடர்ந்தபடி இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். உடல்நலத்திலும் கவனம் தேவை. 

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.

மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பண வரவு உண்டு.

கடகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

கன்னி: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனஇறுக்கம் நீங்கும். பிரபலங்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

துலாம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். முக்கிய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள்.

தனுசு: திடீர் பயணங்கள், தூக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் எதிர்பாராத வகையில் சங்கடங்கள் வந்து நீங்கும்.

மகரம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கும்பம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

மீனம்: நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close