[X] Close

6ம் தேதி அமாவாசை; தர்ப்பணம் செய்ய மறக்காதீங்க!


tharppanam

  • kamadenu
  • Posted: 05 Dec, 2018 20:30 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி 

நாளை 6.12.18 வியாழக்கிழமை கார்த்திகை மாத அமாவாசை. எனவே தர்ப்பணம் செய்து, முன்னோரை வழிபடுவோம். நாமும் நம் சந்ததியினரும் வளமாகவும் நலமாகவும் பலமாகவும் வாழ்வோம்.

அமாவாசை என்பது முன்னோருக்கான நாள். பித்ருக்களை வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள். மாதந்தோறும் அமாவாசை நாளில், நம் முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது, நம் தலையாயக் கடமை என்கிறது சாஸ்திரம்.

வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உண்டு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். எவரொருவர் தர்ப்பணம் செய்து, முன்னோரை வணங்கி, குளிரப் பண்ணுகிறார்களோ அவர்கள் இல்லத்தில் தரித்திரம் விலகும் என்றும் சந்ததியினர் சந்துஷ்டியுடன் அதாவது தேகம் மற்றும் மனோபலத்துடன் சிறக்க வாழ்வார்கள் என்றும் தெரிவிக்கின்றன சாஸ்திரங்கள்.

கார்த்திகை மாதத்தின் அமாவாசை நாளைய தினம். 6.12.18. வியாழக்கிழமை. குருவுக்கு உகந்த நாள். நம் முன்னோரும் ஒருவகையில் நமக்கு குருவே! எனவே இந்த நன்னாளில், அமாவாசை எனும் அற்புத நாளில், முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்களின் படங்களை பூக்களால் அலங்கரித்து, தீபதூபமிட்டு நமஸ்கரிப்போம்.

நம் முன்னோரை நினைத்து நான்குபேருக்கேனும் தயிர்சாதம் உணவுப்பொட்டலம் வழங்குவோம். நாமும் நம் சந்ததியினரும் வளமுடனும் நலமுடனும் பலமுடனும் வாழ்வோம் என்பது உறுதி!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close