[X] Close

வார ராசிபலன்: நவம்பர் 29 முதல் டிசம்பர் 05 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


weekly-horoscope-set-1

  • kamadenu
  • Posted: 29 Nov, 2018 11:35 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாயின் ராகு சாரத்தால் எதையும் சமாளிக்கும் தைரியம் உண்டாகும். எடுத்த காரியங்களில் தாமதம் நீங்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். உத்தியோகத்தில் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும்.

கேதுவின் சாரத்தால் எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பச் செலவை சமாளிக்கும் வகையில் பணவரவு இருக்கும். ஆன்மிக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு, அடுத்தவர்கள் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். கலைத் துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மனஸ்தாபம் நீங்கும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாகச் செய்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்:  ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்கப் பிரச்சினைகள் குறையும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை சூரியன், செவ்வாய், குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவையை அறிந்து செயல்பட வேண்டும். உத்தியோகத்தில்  துணிச்சலாக வேலைகளைச் செய்து  வெற்றி பெறுவார்கள்.

சக ஊழியர்கள், மேலதிகாரிகளால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறலாம். குடும்பத்தில் கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பெண்களுக்கு அடுத்தவர் கூறுவதைச் செய்யும் முன்னர் ஆலோசனை செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தடைபட்டிருந்த கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சினால் வியாபாரத்தை லாபகரமாகச் செய்வார்கள். உத்தியோகத்தில்  அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தவர், உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு, மனதைரியம் உண்டாகும். கலைத் துறையினருக்கு மனத்தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு, எதிர்பார்ப்புகளைக் குறைத்து இருக்கும் வளங்களைக் கொண்டு முன்னேற முயற்சிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, கிழக்கு

நிறங்கள்: பச்சை, வெள்ளை

எண்கள்: 3, 5 பரிகாரம்:  புதன்கிழமையன்று நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதையும் ஆழமாக யோசித்துச் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களை வெற்றிகரமாகச் செய்வீர்கள். தைரியம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் எதையும் ஆலோசித்துச் செய்வது நன்மை தரும். மேலதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

நிதானமாகப் பேசுவது அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகிச் செல்வது போல் இருக்கும். கவலை வேண்டாம். குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். மனம்மகிழும் காரியங்கள் நடக்கும். மாணவர்களுக்கு, எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்துச் செய்வது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெண்மை

எண்கள்: 4, 5, 6 பரிகாரம்: அம்மனுக்கு பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் சுகஸ்தானத்தில் இருக்கிறார். வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம்பெறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் வேறுபாடுகள்அகலும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். சுபச்செலவுகள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு, எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும். கலைத் துறையினருக்கு வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, பகை பாராட்டியவர்கள் நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுகளுக்காக பயணம் போவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு

எண்கள்: 1, 9

பரிகாரம்: தினமும் கோதுமை மாவைக் காகத்துக்கு வைக்கப் பிரச்சினைகள் குறையும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.  பணவரவு தாமதப்படும். வீண் ஆசைகள் தோன்றலாம். தொழில், வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில், மற்றவர்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். மேலதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

குடும்பாதிபதி சுக்கிரன் ஆட்சியில் இருக்கிறார். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு, வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கலைத் துறையினருக்கு, உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: வடமேற்கு, கிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 5, 6

பரிகாரம்: புதன்கிழமையன்று பெருமாளை வணங்கி ஒன்பது ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க மனத்தெளிவு உண்டாகும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close