[X] Close

கார்த்திகையில் சூரிய வழிபாடு: சொத்துப் பிரச்சினை நீங்கும்!


karthigai-spl

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 10:47 am
  • அ+ அ-

கார்த்திகை மாதத்தில் சூரிய வழிபாடு செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்பது ஐதீகம். 

   கார்த்திகை மாதத்தை விருச்சிக மாதம் என்று ராசியின் பெயரால் அழைப்பார்கள். இந்த வீடு அனல் கிரகமான செவ்வாயின் வீடு.  எனவே, சூரியனுக்கு இந்த மாதத்தில் வழிபாடு செய்வதால், பரம்பரை சொத்துக்களால் பலன் கிடைக்கும். அது தொடர்பான சிக்கல்களும் விலகிவிடும். பூர்வீகச் சொத்து நம்மைவிட்டுப் போகாது. கண் சம்பந்தமான நோய்கள் அணுகாது. பார்வையின் சக்தி மேம்படும்.

  கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சூரியனை வழிபடுவதும், ஜோதிர்லிங்கங்களை வழிபடுவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும். காஞ்சியில் அருளும் சிவாலயங்களில் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயமும் பிரசித்தி பெற்ற திருத்தலம். 

  கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு உள்ள சூரிய தீர்த்தத்தில் மூழ்கி, அதன் கரையில் உள்ள இஷ்டலிங்க பெருமானையும் கச்சபேசரையும் வழிபட்டால் நினைத்த நல்லவை யாவும் நல்லவிதமாக நடக்கும், வாழ்வில் மங்கலங்கள் உண்டாகும். கண்ணொளி மேம்படும். தலை சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close