[X] Close

அம்மாவுக்கும் பிள்ளைக்கும் உகந்தநாள்! அல்லல் அகலும்; கடனெல்லாம் தீரும்! 


sasti-vazhipadu

  • வி.ராம்ஜி
  • Posted: 23 Mar, 2018 09:18 am
  • அ+ அ-

பங்குனி சஷ்டி நம் பாவங்களையெல்லாம் போக்கிவிடும் என்பார்கள். அதேபோல், வெள்ளிக்கிழமையும் உன்னதமான நாள். அம்பிகைக்கு உரிய அருமையான நாள். சஷ்டி திதி என்பது முருகனுக்கு உகந்தநாள். எனவே அம்மா பார்வதிக்கும் மைந்தன் மயில்வாகனனுக்கும் உகந்தநாளான இன்றைய தினம் ஆலயம் சென்று, கண் குளிரத் தரிசியுங்கள். கவலைகள் அனைத்தும் பறந்தோடும்... கவலையே படாதீர்கள்.

பங்குனி விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வரும் சஷ்டி திதியில், முருகப்பெருமானை  மனதில் நினைத்து, விரதம் இருப்பது, கந்த புராணம் படிப்பது, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது அனைத்தும் நன்மை தரும்.

சர்க்கரைப் பொங்கல், பாயசம் நைவேத்தியம் செய்து, சங்கரன் புதல்வனை  ஆராதனை செய்தால், கந்தனின் அருள் பூரணமாகக் கிடைத்து, வினைகள் யாவும் தீர்ந்து, உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் தெய்வ கடாக்ஷத்துடனும் வாழலாம் என்கிறார்கள்  ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், செவ்வாயும் வெள்ளியும் அம்பாளுக்கு உரிய நாட்கள். இந்த நாட்களில், அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் வீட்டில் லலிதா சகஸ்ர நாமம், அபிராமி அந்தாதி, செளந்தர்ய லஹரி முதலானவற்றைப் பாராயணம் செய்வதும் மிகுந்த பலனைத் தரும்.

அதேபோல், வீட்டில் கடன் தொல்லை இருந்தால், கருத்து வேற்றுமை இருந்தால், விளக்கேற்றி, அம்மன் துதி பாடல்களைப் பாடி, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயசம் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள்.

அம்பாளுக்கு உகந்த வெள்ளியில், உமையவளின் மைந்தன் வள்ளிமணாளனுக்கு உரிய சஷ்டியில், இருவரையுமே வணங்குங்கள். இரண்டுபேருக்குமே செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே செந்நிற மலர்கள் சூட்டி, ஆராதியுங்கள். அல்லல்கள் அனைத்தும் தீரும். கடனில் இருந்து விடுபடுவீர்கள். தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது உறுதி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close